9
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதியின் ஆலோசகர்களாக இருவர் நியமனம் : வெளியான அறிவிப்பு

Share

ஜனாதிபதியின் ஆலோசகர்களாக இருவர் நியமனம் : வெளியான அறிவிப்பு

இலங்கை ஜனாதிபதிக்கு நிதி மற்றும் பொருளாதார விடயங்களில் ஆலேசானை வழங்கி வழிநடத்துவதற்காக இரண்டு ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் (Vijitha Herath) இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் துமிந்த குலங்கமுவவும் (Duminda Hulangamuwa), ஸ்ரீஜெயவர்த்தனபுர பல்கலைகழக பேராசிரியர் அனில் பெர்ணாண்டோவும் (Anil Fernando) ஜனாதிபதியின் ஆலோசகர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

அமைச்சரவையில் கலந்தாலோசித்த பின்னர் ஜனாதிபதி தனக்கான பணியாளர்களை நியமிக்கலாம், அரசமைப்பில் இதற்கு இடமுள்ளது என அமைச்சரவை பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனடிப்படையில் அமைச்சரவை இந்த நியமனங்களிற்கு அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் இரண்டு நியமனங்களும் செப்டம்பர் 24 முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இவை கௌரவ பதவிகள் எனவும் எந்த சம்பளமோ அல்லது வேறு நன்மைகளோ வழங்கப்படாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...