24 66f8ce3f915ac 5
உலகம்

வெளிநாடொன்றில் சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி

Share

வெளிநாடொன்றில் சுற்றுலா சென்ற பாடசாலை மாணவர்களுக்கு நேர்ந்த கதி

தாய்லாந்தில்(Thailand) சுற்றுலா சென்ற பாடசாலை பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்ததில் 25 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்துச் சம்பவம் தாய்லாந்தின் தலைநகரை அண்மித்த பகுதியில் இன்று (01.10.2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்தானது பாடசாலை சுற்றுலாவிற்காக மத்திய உதாய் தானி மாகாணத்தில் இருந்து அயுதயா மற்றும் நொந்தபுரி மாகாணங்களுக்கு பயணித்த நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், விபத்துக்குள்ளான பேருந்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என 44 பேர் வரை பயணித்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்நிலையில், பேருந்தில் பயணித்த 44 பேரில் தற்போது வரை 25 பேர் வரை உயிரிழந்துள்ளதாகவும் பேருந்தின் சாரதி உயிர் பிழைத்ததுடன் தப்பி ஓடியதாகவும் கூறப்படுகின்றது.

Share
தொடர்புடையது
14 6
உலகம்செய்திகள்

ட்ரம்ப் முன்வைத்த திட்டத்தை முறையாக அங்கீகரித்த இஸ்ரேல் : அடுத்தது என்ன..!

அமெரிக்க ஜனாதிபதி ட;ரம்ப் முன்வைத்த திட்டத்தை இஸ்ரேலின் அமைச்சரவை முறையாக அங்கீகரித்துள்ளது. நேற்று(09.10.2025) இரவு கூடிய...

13 10
உலகம்செய்திகள்

வெளிநாடொன்றில் கொடூரம் : வழக்கு விசாரணையில் நீதிபதி சுட்டுக்கொலை

அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் குற்றவியல் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் நீதிபதி ஒருவரை சுட்டுக் கொன்ற சம்பவம்...

11 13
உலகம்செய்திகள்

காசாவில் நிரந்தர அமைதி.. ஹமாஸின் அறிவிப்பால் புதிய திருப்பம்

போர் முடிவுக்கு வந்து நிரந்தர போர் நிறுத்தம் தொடங்குவதாக ஹமாஸின் மூத்த தலைவர் கலீல் அல்-ஹய்யா...

4 13
உலகம்செய்திகள்

சீன நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் : பல மைல்களுக்கு சிக்கித் தவித்த கார்கள்

சீனாவின் மிகப்பெரிய சுங்கச்சாவடியான வுசுவாங்கில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன....