2 41
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டாபய வழியில் பயணிக்கும் அநுர குமார: ஒப்பிடும் முன்னாள் எம்.பி

Share

கோட்டாபய வழியில் பயணிக்கும் அநுர குமார: ஒப்பிடும் முன்னாள் எம்.பி

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய (gotabaya) செய்ததை, தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார செய்து வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே (mahindananda aluthgamage) தெரிவித்தார்.

கோட்டாபய ஜனாதிபதி அலுவலகத்தில் இருந்த 993 வாகனங்களை வேறு நிறுவனங்களுக்கு பகிர்ந்தளித்தார், ஜனாதிபதி அலுவலகத்தில் மதிய உணவு நேரத்தை குறைத்தார், பாலுக்கு பதிலாக தேநீர், வழங்கினார் ஜனாதிபதி மாளிகைக்கு பதிலாக ஒரு சிறிய வீட்டில் வாழ்ந்தார் என அளுத்கமகே தெரிவித்தார்.

மிகுந்த எதிர்பார்ப்புடன் அரசாங்கம் அமைக்கப்பட்ட போது மக்கள் இருந்ததாகவும்,ஆனால் ​​அரசாங்கத்தை நடத்துவது மிகவும் கடினமாக இருந்ததாக தெரிவித்த அளுத்கமகே, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் இதே நிலையே ஏற்பட்டதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு (ranil wickremesinghe)ஆதரவான அனைத்து சக்திகளையும் ஒன்று திரட்டி பரந்த கூட்டணியை உருவாக்கி பொதுத் தேர்தலில் வலுவான எதிர்க்கட்சியை கட்டியெழுப்புவேன் என அவர் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் புதிய கூட்டணி உருவாக்கப்படும் எனவும் அளுத்கமகே குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...