19 27
இலங்கைசெய்திகள்

வெள்ளை சீனி இறக்குமதியை மட்டுப்படுத்துமாறு கோரிக்கை

Share

வெள்ளை சீனி இறக்குமதியை மட்டுப்படுத்துமாறு கோரிக்கை

உள்ளூர் சீனி ஆலைகளில் ஏற்பட்டுள்ள கடும் நிதி நெருக்கடி காரணமாக வெள்ளை சீனி இறக்குமதியை மட்டுப்படுத்துமாறு சீனி தொழிற்சாலை நிர்வாகம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலாபத்தில் இயங்கி வந்த 4 உள்ளூர் சீனி ஆலைகள் கடும் நிதி நெருக்கடியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சீனி தொழிற்சாலை நிர்வாகம் கூறியுள்ளனர்.

இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சீனிக்கு வெட் மற்றும் சமூகப் பாதுகாப்பு வரிகளில் இருந்து அரசாங்கம் விலக்கு அளித்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனிக்கு மாத்திரம் அந்த வரிகளை விதித்ததே இதற்கு முக்கியக் காரணம் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலைமை காரணமாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனி கிலோ ஒன்றின் விலை 325 முதல் 350 ரூபா வரையிலும், இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனி கிலோ ஒன்றின் விலை 225 முதல் 250 ரூபா வரையிலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், 100 வீதம் அரசாங்கத்திற்குச் சொந்தமான செவனகல மற்றும் பெல்வத்த ஆகிய இரண்டு சீனி நிறுவனங்களின் கீழ் சுமார் 1,500 தொழிலாளர்களும், 35,000 கரும்பு விவசாயக் குடும்பங்களும் உள்ளதாகவும், 51 தனியார் துறையினரால் நடத்தப்படும் நான்கு உள்ளூர் சீனி ஆலைகளான கல்ஓயா மற்றும் எதிமலே ஆகியவற்றின் கீழ் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போதைய சூழ்நிலையால் நிறுவன ஊழியர்களுக்கும், கரும்பு விவசாயிகளுக்கு சம்பளம் வழங்க முடியாமல் தங்களது நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியில் உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு தீர்வாக இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனிக்கு உடனடியாக VAT மற்றும் சமூக பாதுகாப்பு வரியை விதித்து வெள்ளை சீனி இறக்குமதியை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூர் சீனி தொழிற்சாலை நிர்வாகம் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது, ​​இலங்கையில் மாதாந்தம் சுமார் 30,000 மெட்ரிக் தொன் சீனி நுகர்வாகும். அதேவேளை, உள்ளூர் சிவப்பு சீனி உற்பத்தி வருடத்திற்கு சுமார் 120,000 மெட்ரிக் தொன்களாகும். கடந்த நான்கு மாதங்களில் மட்டும் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட வெள்ளை சீனியின் அளவு 256,000 மெட்ரிக் தொன்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....