22 8
ஏனையவை

கையெழுத்திடாத காசோலையை ஏற்க மறுத்த ராகுல் ராவிட்டின் பெருந்தன்மை

Share

கையெழுத்திடாத காசோலையை ஏற்க மறுத்த ராகுல் ராவிட்டின் பெருந்தன்மை

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ராகுல் ராவிட், ஐபிஎல் அணியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தலைமைப்பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐ.பி.எல். அணிகள் ராகுல் ராவிட்டை தலைமை பயிற்சியாளராக நியமிக்க முயற்சி செய்தன. அவர் ஏற்கனவே விளையாடிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி, ராகுல் ராவிட் எங்கள் அணியின் தலைமை பயிற்சியாளர் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே ராகுல் ராவிட்டை தலைமை பயிற்சியாளர் பதவிக்கு அணுகியபோது, கையெழுத்திடாத காசோலையை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி ராகுல் ராவிட்டுக்கு கொடுக்க முன்வந்துள்ள நிலையில், அதை ராகுல் ராவிட் புறக்கணித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவர் அணிக்கு மீண்டும் திரும்புவதை விரும்பியதாலும், இதை ஒரு உணர்ச்சிகரமானதாக எடுத்துக் கொண்டதாலும் அந்த நன்கொடையை நிராகரித்துள்ளார்.

ராகுல் ராவிட் 2011 முதல் 2013 வரை ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ராஜஸ்தான் அணியில் இருந்து ஓய்வு பெற்றபின், இரண்டு சீசனில் அந்த அணியின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்

Share
தொடர்புடையது
25 68f5bb1f9b4cc
ஏனையவை

மாகாண சபை தேர்தல் முறை பற்றி முடிவு பின்னர் அறிவிக்கப்படும்:நாமல் ராஜபக்ச

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) கட்சி கிராம மட்டங்களிலும் பலமடைந்து வருவதாக அக்கட்சியின் தேசிய அமைப்பாளர்...

1717386794 images
ஏனையவை

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு பரவல் மீண்டும் அதிகரிப்பு22 பேர் உயிரிழப்பு!

நாட்டின் 11 மாவட்டங்களில் டெங்கு நோய் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு...

ஏனையவை

“ஹீரோக்களுக்காக மட்டுமே சினிமா”: நடிகை ராதிகா ஆப்தேவின் அதிர்ச்சிக் கருத்து!

Rajinikanth Radhika Apte Actress இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவரான ராதிகா ஆப்தே, தான்...

download
ஏனையவை

தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளி ஏமாற்றம்: நாளாந்த வேதனம் குறித்து வடிவேல் சுரேஷ் கருத்து

இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் வடிவேல் சுரேஷ், இந்த முறை தீபாவளிக்கு...