8 10
இந்தியாசெய்திகள்

முதலில் எங்களை தாக்கினார்கள்.. இப்போது விஜயை தாக்குகிறார்கள்: குரல் கொடுத்த தமிழிசை

Share

நடிகர் விஜயின் The Goat படத்தின் தலைப்பில் சனாதனம் உள்ளதாக எம்பி ரவிக்குமார் கூறிய நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய் நடித்துள்ள ‘தி கோட்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்பி ரவிக்குமார் படத்தின் தலைப்பை விமர்சனம் செய்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், “விஜய் படத்தின் தலைப்பில் ‘சனாதனம்’? The Greatest of all time என்பது ஒரு சனாதனக் கருத்தில்லையா? ‘காலமெல்லாம் பெரியது இதுதான்’ என்றால் காலம் மாறினாலும் இது மாறாது என்றுதானே அர்த்தம்!

‘என்றும் மாறாதது’ என்பதுதானே ‘சனாதனம்’ என்ற சொல்லின் பொருள்! இதைத் தெரிந்துதான் விஜய் படத்துக்குத் தலைப்பு வைத்தார்களா? எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே (தொல்.சொல். 157)” என்று பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில் இது தொடர்பாக பாஜகவின் மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், “எங்களிடம் தான் சனாதனம் பார்த்தார்கள் என்றால் இப்போது விஜயிடமும் சனாதனம் பார்க்கின்றனர்.

முதலில் எங்களை தாக்கினார்கள். இப்போது தம்பி விஜயை தாக்குகிறார்கள். முதலில் சனாதானம் என்ற வார்த்தைக்கு ரவிக்குமாருக்கு அர்த்தம் தெரியுமா?

இதன் மூலம் அவருக்கு சனாதனம் என்னவென்றால் தெரியாது என்பதை ஒப்புக்கொண்டுள்ளார்” என்றார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...