19 4
இலங்கைசெய்திகள்

மாகாண சபை தேர்தல் இழுத்தடிப்புக்கு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலே காரணம்: அமைச்சர் டக்ளஸ்

Share

மாகாண சபை தேர்தல் இழுத்தடிப்புக்கு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலே காரணம்: அமைச்சர் டக்ளஸ்

மாகாண சபை தேர்தல் பிற்போடப்படுகின்றமைக்கு தமிழ் கட்சிகளின் சந்தர்ப்பவாத அரசியலும் ஒரு காரணமாக அமைவதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட மாகாண சபை தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை ஒத்திவைக்கப்பட்டமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழரசு கட்சியினுடய நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நாடாளுமன்றத்தில் மாகாண சபை தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை வைத்திருந்தார்.

அது தொடர்பான விவாதங்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வரும் நிலையில் தமிழ் கட்சிகள் ரணில் விக்ரமசிங்கவை அண்மையில் சந்தித்தபோது குறித்த பிரேரணியை நிறைவேற்றுவது தொடர்பில் சாதகமான கருத்துக்களை முன்வைத்ததாக அறிகிறேன்.

இவ்வாறான நிலையில் இறுதியாக இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் சுமந்திரனால் கொண்டுவரப்பட்ட மாகாண சபை தொடர்பான தனிநபர் பிரேரணை ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த ஒத்திவைப்பு, தமிழரசு கட்சி, சஜித் பிரேமதாசவுக்கு, ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளித்தமையின் தாக்கமாக இருக்கலாம்.

ஏனெனில் தற்போது ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசாரங்கள் இடம்பெறுகின்ற நிலையில் மாகாண சபை தொடர்பான விவாதம் சிலருக்கு தேவையாக இருக்கலாம் மற்றொரு தரப்பினர் அதை விரும்பாமல் இருக்கலாம்.

இருந்தாலும் தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கொண்டு வந்த மாகாண சபை தேர்தல் தொடர்பான தனிநபர் பிரேரணை இறுதியாக இடம் பெற்ற நாடாளுமன்ற அமர்வில் எடுத்துக் கொள்ளப்படுகிறது என தெரிந்தும் அதற்கு முன்னரே சஜித் பிரேமதாசாவின் ஆதரவு அறிவிப்பை சுமந்திரன் வெளியேற்று விட்டார்.

தமிழரசு கட்சி சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு வழங்கப் போவதாக எடுத்த முடிவு மக்களின் முடிவல்ல அது கட்சி சார்ந்த முடிவு.

தற்போது ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்கள் இடம் பெற்று வரும் நிலையில் நாடாளுமன்றத்தில் மாகாண சபை தேர்தல் தொடர்பான முடிவுகள் சாதகமாக அமையும் நிலையில் தமிழ் தலைமைகளின் சந்தர்ப்பவாத அரசியல் தமிழ் மக்களை பின்னோக்கி நகர்த்துகிறது.

13 ஆவது திருத்தம் தமிழ் மக்களின் அரசியலுக்கான ஆரம்ப புள்ளி என அன்றிலிருந்து அதே நிலைப்பாட்டையே கூறி வருகிறேன்.

ஆனால் தமிழ் மக்களை ஏகப்பிரதிநிதிகள் என கூறுவோர் 13 ஆவது திருத்தத்தை தொட்டுப் பாக்க மாட்டோம் என கூறிவிட்டு கடந்த மாகாண சபையில் தமிழ் இனத்தை பெற்று தர போகிறோம் என மக்களை உசிப்பேற்றி வாக்குகளை பெற்றார்கள்.

இறுதியில் மாகாண சபையை நடத்த முடியாமல் கட்சி ரீதியாகப் பிரிந்து நின்று சண்டை பிடித்ததும் தமக்கு ஆடம்பர வாகனம் வேண்டும் என அயல்நாடு ஒன்றுக்கு கடிதம் அனுப்பியதுமே நடந்தது.

சக தமிழ் காட்சிகள் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வினை வழங்க விடாது தமதுஅரசியல் இருப்புக்களை தக்க வைத்துக் கொள்வதற்காக காலத்துக்கு காலம் மக்களை உசுப்பேத்தி அரசியல் நாடகம் நடத்தி வருகிறார்கள்.

இனியும் அவர்களின் நாடகத்தை மக்கள் நம்ப மாட்டார்கள் ஏனெனில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதற்கான பதில்களை மக்கள் தமது வாக்குகளால் வழங்கியுள்ளார்கள்.

எனது அரசியல் பயணம் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு அன்றாட பிரச்சனை மற்றும் அபிவிருத்தி ஆகியவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதே எனது இலக்கு.

ஆகவே தமிழ் மக்கள் தமக்கான ஜனாதிபதியை தீர்மானித்துள்ள நிலையில் எதிர்வரும் 21 ஆம் திகதி சிறந்த ஒரு முடிவை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்” என அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Government Unveils Plans to Boost Domestic Aviation in Support of Tourism
இலங்கைசெய்திகள்

சுற்றுலாத்துறையை ஊக்குவிக்க உள்நாட்டு விமான சேவைகள் விரிவாக்கம்: அமைச்சர் அனுர கருணாதிலக்க உறுதி!

இலங்கையின் சுற்றுலாத்துறையை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லும் நோக்கில், உள்நாட்டு வானூர்தி போக்குவரத்து வலையமைப்பை வலுப்படுத்துவதற்கான புதிய...

94745991
செய்திகள்உலகம்

சிரியாவில் அமெரிக்காவின் ஆபரேஷன் ஹாக்ஐ ஸ்ட்ரைக்: ஐஎஸ் இலக்குகள் மீது மீண்டும் வான்வழித் தாக்குதல்!

சிரியாவில் நிலைகொண்டுள்ள ஐஎஸ் (IS) பயங்கரவாத அமைப்பினரை இலக்கு வைத்து, அமெரிக்கப் படைகள் மற்றும் அதன்...

default
உலகம்செய்திகள்

ஈரானில் 14-வது நாளாகத் தொடரும் போராட்டம்: 116 பேர் உயிரிழப்பு; போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை எச்சரிக்கை!

ஈரானில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய மக்கள் போராட்டம்,...

1185212 anbu
செய்திகள்இலங்கை

யாருடன் கூட்டணி? – ராமதாஸ் இன்று சென்னை வருகை; நாளை வெளியாகிறது அதிரடி அறிவிப்பு!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாட்டாளி மக்கள் கட்சியின் (பா.ம.க) கூட்டணி நிலைப்பாடு...