இலங்கை

தமிழ் மக்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை : குகதாசன் எம். பி

24 66c9f0e469876
Share

தமிழ் மக்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை : குகதாசன் எம். பி

இலங்கை தீவுக்கு 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்தாலும் தமிழ் மக்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன் (Kathiravelu Shanmugam Kugathasan) தெரிவித்துள்ளார்.

திருகோணமலை (Trincomalee) ஆனந்தபுரி விளையாட்டு மைதானத்தில் நாடாளுமன்ற உறுப்பினரை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வொன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “இலங்கை தமிழரசுக் கட்சி 75 வருடங்களாக இழந்த உரிமைகளை பெறுவதற்காக போராடி வருகிறோம்.

இந்த பகுதியில் சுமார் 3000 கடற்றொழிலாளர்கள் குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர் இங்கு குடியிருக்கும் மக்களுக்கான காணி உரிமம் இல்லை.

இது தொடர்பில் உரிய அமைச்சர்களுடன் அதிகாரிகளுடன் பேசியுள்ளதுடன் நாடாளுமன்றத்தில் கூட பேசியுள்ளேன்.

மக்கள் உரிமைகளை விட பல கிராமங்களுக்கு செல்லும் போது வாழ்வாதாரம் வீதி அபிவிருத்திகளை பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கின்றனர்.

உரிமைகள் விடுதலைப் போராட்டங்கள் உரிமைகளை மற்றும் அபிவிருத்தி போன்றவைகளையும் சமாந்தரமாக கொண்டு செல்ல வேண்டும்.

கடற்றொழிலாளர் சமூகத்தின் பல பிரச்சினைகளுல் ஒன்றாக சுருக்கு வலை காணப்படுகிறது மற்றும் இங்குள்ள கடற்றொழிலாளர்கள் கடலுக்கு சென்று காணாமல் போயுள்ளனர்.

சல்லி பகுதியில் இரு கடற்றொழிலாளர்கள் காணாமல் போயுள்ளனர் எனவே எல்லோரும் இணைந்ததான தீர்வுகளை இணைந்து பெற்றுக் கொடுப்போம்” என அவர் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
15 7
இலங்கைசெய்திகள்

தமிழரசின் பெருவெற்றி – நான் கூறியது நடந்து விட்டது….! மார்தட்டும் சுமந்திரன்

அன்று நான் கூறியது இன்று நிரூபணமாகியுள்ளது என இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரான ஜனாதிபதி...

13 7
இலங்கைசெய்திகள்

நான் கூறியதை கேட்டிருந்தால் வெற்றி – ரணில் விக்ரமசிங்க

எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து சபைகளில் கூட்டணியாக போட்டியிட்டிருந்தால் ஐம்பது முதல் நூறு எண்ணிக்கையிலான இடங்களை வென்றிருக்க முடியும்...

12 7
இலங்கைசெய்திகள்

பல்கலைகளில் தொடரும் அடாவடித்தனம் : ஆறு மாணவர்கள் அதிரடியாக கைது

சக மாணவர் ஒருவரைத் தாக்கிய குற்றச்சாட்டில் ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலையை (University of Sri Jayewardenepura)...

14 7
இலங்கைசெய்திகள்

வடக்கில் தோல்வியை தழுவிய அநுர கட்சி : காரணத்தை அம்பலமாக்கும் முன்னாள் முதலமைச்சர்

வட மாகாண மக்களுக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படாமையினாலேயே, உள்ளுராட்சி...