24 66c968223670c
இலங்கை

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

Share

உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ள தகவல்

ஜனாதிபதி தேர்தலின் பின்னரே உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியும் என தேர்தல் ஆணைக்குழு (Election Commission) தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பிலான வழக்கு அண்மையில் இடம்பெற்றது.அதன்படி உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை விரைவில் நடத்துமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதற்கமைய, நீதிமன்றின் இந்த தீர்ப்பு குறித்து அடுத்த வாரம் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுடன் கலந்துரையாட உள்ளதாக தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க ( R.M.A.L Ratnayake) தெரிவித்துள்ளார்.

மேலும், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த சிலர் தற்போது உயிரிழந்துள்ளனர்.

சில வேட்பாளர்கள் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றுள்ளதாகவும், பல வேட்பாளர்கள் அரசியலில் இருந்து விலகியுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மேலும், உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்காக சுமார் 3,000 அரசு ஊழியர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் 340 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 9
செய்திகள்இலங்கை

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கதிர்காமம் சென்ற பேருந்து தீப்பற்றி எரிந்து நாசம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் வெலிப்பன்ன (Welipanna) நுழைவாயிலுக்கு அருகாமையில் கதிர்காமம் நோக்கிப் பயணித்த சொகுசுப் பேருந்து...

Untitled 8
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் கடும் வெப்பம் மே மாதம் வரை நீடிக்கும்: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

இலங்கையில் தற்போது நிலவி வரும் கடும் வெப்பமான காலநிலை எதிர்வரும் மே மாதம் வரை நீடிக்கும்...

Untitled 7
செய்திகள்இலங்கைபிராந்தியம்

குமண தேசிய பூங்காவில் சிறுத்தை தாக்குதல்: செக் குடியரசு நாட்டுத் துறவி உயிரிழப்பு!

இலங்கையின் அம்பாறை மாவட்டத்திலுள்ள குமண தேசிய பூங்காவிற்குட்பட்ட பம்பர கஸ்தலாவ ஆரண்ய சேனாசனத்தில் (Bambara Kasthalawa...

Untitled 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்திய ஓட்டுநர் கைது: சாரதி அனுமதிப்பத்திரமும் இல்லை!

சமூக ஊடகங்களில் வைரலாகிய காணொளி காட்சிகளின் அடிப்படையில், வீதி சமிக்ஞைகள் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி...