24 66c026b0157f5
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளருக்கு மனைவிகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் – பாதுகாப்பு கோரும் நபர்

Share

ஜனாதிபதி வேட்பாளருக்கு மனைவிகளால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல் – பாதுகாப்பு கோரும் நபர்

ஜனாதிபதி தேர்தலில் 39 வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வேளையில் அவர்களில் ஒருவர் கூடுதல் பாதுகாப்பை வழங்குமாறு கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஜனாதிபதி வேட்பாளர் அதிக பாதுகாப்பை கோரியுள்ள போதிலும், அவருக்கு அச்சுறுத்தல் உள்ளதா என ஆராயப்பட்டது.

இதன் போது அவரது திருமணத்திற்கு புறம்பான தொடர்பில் உள்ளமையே பிரச்சினையை தவிர வேறு எந்த பிரச்சனையும் பொலிஸாரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

பிரதான வேட்பாளர்களான ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ஷ, விஜயதாச ராஜபக்ஷ ஆகியோருக்கு விசேட பாதுகாப்பையும், திலித் ஜயவீரவுக்கு அதிக பாதுகாப்பையும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுதவிர, வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டுமா என பரிசீலிக்கும் போது, ​​பெண்கள் பிரச்னையை அடிப்படையாகக் கொண்ட வேட்பாளர் மட்டுமே, சிறப்பு பாதுகாப்பு கோரியுள்ளார் என தெரியவந்துள்ளது.

எவ்வாறாயினும், தேர்தல் சட்டங்களுக்கமைய, இவர்கள் ஒவ்வொருவருக்கும் விசேட பாதுகாப்பு வழங்குவது பொருத்தமானதல்ல என தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தெரிவிக்கின்றன.

இந்த 39 வேட்பாளர்களுக்கும் சமமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டுமென அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
MediaFile 1 10
செய்திகள்அரசியல்இலங்கை

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் துப்பாக்கியுடன் காணப்பட்ட முன்னாள் எம்.பி: விசாரணைக்காகப் பறிமுதல்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதித லொக்குபண்டாரவிடம் (Uditha Lokubandara) இருந்த ஒரு கைத்துப்பாக்கியை நுகேகொடப் பொலிஸ்...

parliament2
செய்திகள்அரசியல்இலங்கை

அனர்த்த நிலைமை குறித்துப் பேச: பாதிக்கப்பட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு!

நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமைகள் குறித்து விவாதிப்பதற்காக, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த பாராளுமன்ற...

images 6 2
செய்திகள்இலங்கை

வாகன இறக்குமதி நிலையான மட்டத்தை அடைந்தது; டொலர் கையிருப்பு உயரும்: மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!

இலங்கையில் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வாகன இறக்குமதி குறிப்பிடத்தக்க அளவில் நிலையான மட்டத்தை அடைந்துள்ளதாக,...