சினிமா
சூடு பறக்க நடக்கும் பிக்பாஸ் 8 போட்டியாளர்களின் வேட்டை, உறுதிசெய்யப்பட்ட 3 போட்டியாளர்கள்… இந்த சீரியல் பிரபலங்களா?
சூடு பறக்க நடக்கும் பிக்பாஸ் 8 போட்டியாளர்களின் வேட்டை, உறுதிசெய்யப்பட்ட 3 போட்டியாளர்கள்… இந்த சீரியல் பிரபலங்களா?
சன் டிவி ஒருபக்கம் விதவிதமாக கதைக்களத்தில் சீரியல்கள் ஒளிபரப்பி கலக்கி வருகிறார்கள்.
இன்னொரு பக்கம் விஜய் தொலைக்காட்சியில் நிறைய ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அப்படி ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட, எதிர்ப்பார்க்கப்பட்ட ஒரு ஷோ என்றால் அது பிக்பாஸ் தான்.
தொடர்ந்து 7 சீசன்கள் வெற்றிகரமாக ஒளிபரப்பாக இப்போது 8வது சீசனை காண தான் ரசிகர்கள் ஆவலாக வெயிட்டிங். 7 சீசன்கள் வரை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் பிக்பாஸில் இருந்து விலகியிருக்கிறார்.
அண்மையில் தான் ஒரு பெரிய அறிக்கை வெளியிட்டு இதனை அறிவித்தார். அவருக்கு பிறகு பிக்பாஸ் ஷோவை தொகுத்து வழங்கப்போவது யார் என்ற பெரிய வாக்குவாதம் சமூக வலைதளங்களில் அதிகம் நடக்கிறது.
அதன்படி சிம்பு, விஜய் சேதுபதி, சரத்குமார் என பலரின் பெயர்கள் அடிபடுகிறது, ஆனால் யார் தொகுப்பாளர் என்பதை பொறுத்திருந்து காண்போம்.
இந்த நிலையில் பிக்பாஸ் 8வது சீசனில் உறுதி செய்யப்பட்டுள்ள 3 போட்டியாளர் என ஒரு தகவல் ரசிகர்களிடம் வலம் வருகிறது.
கடந்த 7வது சீசனில் வைல்ட் கார்ட்டு என்ட்ரி கொடுத்து அசத்தி வெற்றிப்பெற்ற அர்ச்சனாவின் காதலர் என்று கூறப்படும், பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் மற்றும் அதே தொடரில் வில்லியாக கலக்கிய பரீனா இருவரும் உறுதியானதாக கூறப்படுகிறது.
அதேபோல் டிடிஎப் வாசனின் காதலி ஷோயாவும் பிக்பாஸ் 8 போட்டியாளர் என்கின்றனர்.