19 6
இலங்கைசெய்திகள்

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு: இலங்கையில் இருந்து பறந்த 100 பேர்

Share

தென் கொரியாவில் வேலைவாய்ப்பு: இலங்கையில் இருந்து பறந்த 100 பேர்

தென் கொரியாவில் (South Korea) உற்பத்தித் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெற்ற மேலும் 100 இலங்கையர்கள் நேற்று (06) தென் கொரியாவுக்குச் சென்றுள்ளனர்.

இந்தக் குழுவில் 08 யுவதிகளும் உள்ளடங்குவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

அதன்படி, இந்த ஆண்டு ஒகஸ்ட் மாதத்திற்குள் 3,694 பேர் தென் கொரியாவில் வேலைக்குச் சென்றுள்ளனர்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தென் கொரிய மனித வள அபிவிருத்தி சேவை நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வுக்கு அமைய, இலங்கையர்களுக்கு இந்த தொழில் வாய்ப்புகள் கிடைக்கப்பெறுகின்றன.

புரிந்துணர்வு உடன்படிக்கையின் பிரகாரம், 2004 ஆம் ஆண்டு முதல் இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலைக்காக சென்றுள்ளதாகவும், இம்முறை 873 ஆவது குழு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...