19 4
உலகம்செய்திகள்

நாட்டில் இருந்து வெளியேறிய சேக் ஹசீனா : சிறையிலிருந்து விடுவிக்கப்படவுள்ள முன்னாள் பிரதமர்

Share

நாட்டில் இருந்து வெளியேறிய சேக் ஹசீனா : சிறையிலிருந்து விடுவிக்கப்படவுள்ள முன்னாள் பிரதமர்

பங்களாதேஷின் பிரதமர் பதவியிலிருந்து சேக் ஹசீனா விலகி நாட்டை விட்டு வெளியேறிய சில மணி நேரங்களுக்குப் பின்னர், சிறையில் அடைக்கப்பட்டிருந்த, எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் பிரதமருமான காலிதா சியாவை (Khaleda Zia) விடுவிக்கும் உத்தரவை பங்களாதேஷின் ஜனாதிபதி முகமது சஹாபுதீன் (Mohammed Shahabuddin) விடுத்துள்ளார்.

காலிதா சியா பிரதமர் பதவியில் அமர வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தநிலையில் நாட்டை விட்டு வெளியேறியுள்ள முன்னாள் பிரதமர் சேக் ஹசீனா, பெரும்பாலும் பிரித்தானியாவில் அடைக்கலம் பெறுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதேவேளை பங்களாதேஷின் நெருக்கடி குறித்து நேற்று இந்தியாவில் இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்திற்கு இந்திய பிரதமர் மோடி தலைமை தாங்கினார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் சா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, பிரதமரின் முதன்மை செயலாளர் பிகே மிஸ்ரா, ரோவின் அதிகாரிகள் ஆகியோர் பங்கேற்றனர்.

Share

Recent Posts

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்உலகம்

உலகையே உலுக்கும் எலான் மஸ்க்கின் மெகா திட்டம்: ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் xAI நிறுவனங்கள் பங்குச் சந்தையில் தடம் பதிக்கின்றன!

உலகின் மிகப் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், தனது விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX)...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் பல மாகாணங்களுக்கு ‘ஆம்பர்’ எச்சரிக்கை: பலத்த மின்னல் மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு!

இலங்கையின் மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அனுராதபுர...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொருளாதார ஸ்திரத்தன்மையில் இலங்கை முன்னேற்றம்: ஜனாதிபதி அநுர குமாரவிடம் சர்வதேச நாணய நிதியம் பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் பொதுச் சேவை: 42% டீசல் சேமிப்பை எட்டியது சுகாதார அமைச்சு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிபொருள் மற்றும் எரிசக்தி சவால்களுக்கு மத்தியில், நாட்டின்...