8 3
இலங்கைசெய்திகள்

கிளப் வசந்த கொலை சம்பவம்: சந்தேகநபர்களின் புகைப்படங்கள் வெளியாகின

Share

கிளப் வசந்த கொலை சம்பவம்: சந்தேகநபர்களின் புகைப்படங்கள் வெளியாகின

அண்மையில் அத்துருகிரியவில் இடம்பெற்ற ‘கிளப் வசந்த’ மற்றும் மற்றுமொரு கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மூவரை கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி அத்துருகிரியில் இருவர் கொல்லப்பட்டதோடு நான்கு பேர் படுகாயமடைந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் 3 பேரை கண்டுபிடிக்க உதவுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த குற்றச்செயல் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் விசாரணை அதிகாரிகளால் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்களின் 03 புகைப்படங்களை பொலிஸார் ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.

சந்தேகநபர்களின் விவரம் கீழே,
01- பெயர் – தருகர வருண இந்திக்க டி சில்வா அல்லது சங்கா தேசிய அடையாள எண் – 951350753V

02- பெயர் – பதி ஹரம்பேஜ் அஜித் ரோஹன அல்லது சண்டி

தேசிய அடையாள அட்டை எண் – 199207801772

முகவரி – இல. 655/A மகும்புர, அஹுங்கல்ல

03- பெயர் – முத்துவடுர தரிந்து மதுசங்க டி சில்வா அல்லது ஜெனி

இந்த சந்தேகநபர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளனர்.

குற்றப்பிரிவு மேல் மாகாண தெற்கு – 072-4222223 நிலைய அதிகாரி, அதுரிகிரிய பொலிஸ் நிலையம் – 071-8591657 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
202104130023062602 Bribery SECVPF
செய்திகள்இலங்கை

அரச பதவிகளுக்கு கையூட்டு கோரிய முன்னாள் பிரதியமைச்சர் பணியாளர் உட்பட இருவர் கைது!

அரச பதவிகளுக்கு கையூட்டல் கேட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கையூட்டல் ஒழிப்பு...

25 68e368cf08698
செய்திகள்இலங்கை

இலங்கையில் திருமணங்கள் குறைவு: 2024 இல் 12,066 திருமணப் பதிவுகள் சரிவு!

கடந்த ஆண்டில் (2024) நாட்டில் திருமணங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாயிரத்து அறுபத்தாறு (12,066) குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள்...

25 68fb438418a4b
செய்திகள்இலங்கை

“என் உயிருக்கு ஆபத்து”: தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாக எதிர்க்கட்சி உறுப்பினர் நாடாளுமன்றத்தில் பரபரப்பு குற்றச்சாட்டு!

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதான தனக்குக் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தனது உயிருக்கு ஆபத்து...