1 4 scaled
இலங்கைசெய்திகள்

எதிர்காலத்தில் ஜனாதிபதியாக தமிழ் இளைஞர்கள் …! இந்திய உயர்ஸ்தானிகர் நாமல் முக்கிய சந்திப்பு

Share

எதிர்காலத்தில் ஜனாதிபதியாக தமிழ் இளைஞர்கள் …! இந்திய உயர்ஸ்தானிகர் நாமல் முக்கிய சந்திப்பு

இந்திய உயர்ஸ்தானிகர் (high commissioner) சந்தோஷ் ஜா மற்றும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையில் முக்கிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பின் போது, இலங்கையின் (srilanka) சமீபத்திய அரசியல் முன்னேற்றங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாற்றங்கள் இடம்பெற்றுள்ளது.

ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது தமிழ் இளைஞர்கள் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வேண்டும் அல்லது பிரதமராக வேண்டும் என நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

வடக்கிலிருந்து எதிர்காலத்தில் தமிழ் இளைஞர் ஒருவர் பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவம் செய்வதை எதிர்பார்த்திருக்கின்றேன் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.

அத்துடன், இப்போதும் தமிழ் சமூகத்தில் உள்ள இளவயதினருடன் தனது கட்சி நெருங்கிச் செயற்பட்டு வருவதாக கூறியுள்ளார்.

குறிப்பாக, வடக்கு, கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் இளைஞர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவதில் சிறிலங்கா பொதுஜன பெரமுன அக்கறையாக இருப்பதாகவும் மேலும் அவர்கள் எதிர்காலத்தில் ஜனாதிபதியாக வேண்டும் அல்லது பிரதமராக வேண்டும் என நாமல் ராஜபக்ச மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
11 2
செய்திகள்இலங்கை

இலங்கை மின்சார சபையில் அதிரடி வேலைநிறுத்தம்: 6 மணிநேர போராட்டத்தால் மின் விநியோகத்தில் பதற்றம்!

இலங்கை மின்சார சபையை (CEB) கலைத்து, அதனைச் சட்டவிரோதமான முறையில் மறுசீரமைக்க அரசாங்கம் மேற்கொண்டு வரும்...

10 2
செய்திகள்அரசியல்இலங்கை

புலனாய்வு அதிகாரிகளை வேட்டையாடுவது ஆபத்தானது: சுரேஷ் சலே கைது குறித்து அலி சப்ரி கடும் எச்சரிக்கை!

முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

09 2
செய்திகள்அரசியல்இலங்கை

சுரேஷ் சலே கைது: ஆதாரங்களின் அடிப்படையிலேயே நடவடிக்கை – பொலிஸ் விளக்கம்

முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சலே கைது...

08 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சுன்னாகத்தில் பெண்ணின் தங்கச் சங்கிலி பறிப்பு: மைலிட்டி முகாம் இராணுவச் சிப்பாய் அதிரடிக் கைது!

யாழ்ப்பாணம், சுன்னாகம் நகரப் பகுதியில் நேற்று (25) காலை பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற...