24 66aaafc17ca5a
இலங்கைசெய்திகள்

அமெரிக்காவில் சொத்து குவித்துள்ள பசில்: போட்டுடைக்கும் விமல் வீரவன்ச

Share

அமெரிக்காவில் சொத்து குவித்துள்ள பசில்: போட்டுடைக்கும் விமல் வீரவன்ச

ஏழு தலைமுறைக்கு தேவையான சொத்தை பசில் ராஜபக்ச அமெரிக்காவில் குவித்துள்ளார் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச (Wimal Weerawansa) தெரிவித்துள்ளார்.

கலந்துரையாடல் ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில், அமெரிக்காவில் (USA) பசில் ராஜபக்சவிற்கு (Basil Rajapaksa) உள்ள சொத்தை சரியாக மதிப்பீடு செய்து கணக்கீடு செய்தால், அதை கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக தம்மிக்க பெரேராவை நியமிப்பதற்காக பசில் ராஜபக்ச பணம் பெற்றுக்கொண்டாரா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், யாரிடமும் பணம் கேட்கும் நிலை பசில் ராஜபக்சவுக்கு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையின் முதலாவது பணக்காரராக பசில் ராஜபக்ச இருக்கலாம் எனவும் , மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) அப்படியல்ல என்றும், நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) பற்றி என்ன சொல்வது என்று தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...