இலங்கை
விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம்: இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம்: இலங்கை மக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
சில நோய்களை உணவின் மூலம் குணப்படுத்த முடியும் என சமூக வலைத்தளங்களில் வெளியாகும் விளம்பரங்களுக்கு ஏமாற வேண்டாம் என சுகாதார அமைச்சு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பிட்ட நிறுவனங்களின் பெயர்களைப் பயன்படுத்தி விளம்பரங்கள் செய்யப்படுவதாக சுகாதார அமைச்சின் உணவுக் கட்டுப்பாட்டுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஆனந்த ஜெயலால் தெரிவித்துள்ளார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
“பொதுவாக ஒரு உணவில் எதிர்பார்ப்பது சத்தும், நோய்களைத் தாங்கும் ஆற்றலும் தான். நோய்களைக் குணப்படுத்துவதை மருந்து என்கிறோம். உணவால் நோய்களைக் குணப்படுத்த முடியாது.
குறிப்பாக சமூக ஊடகங்கள் மூலம் சில நோய்களை உணவின் மூலம் குணப்படுத்த முடியும் என விளம்பரம் செய்வது சட்டவிரோதமானது என்றும் தெரிவித்துள்ளார்.