26 3
இலங்கைசெய்திகள்

பரீட்சைகளுக்கான நேர அட்டவணை தொடர்பில் கல்வி அமைச்சு தகவல்

Share

பரீட்சைகளுக்கான நேர அட்டவணையை புதுப்பிப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாகக் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.

பிட்டிபனையில் உள்ள களஞ்சியசாலையில் பாடசாலைப் பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இந்த வருடத்துக்கான கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையை அடுத்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

அத்துடன், ஏற்கனவே திட்டமிட்டபடி, நிறைவடைந்துள்ள கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வெளியானால் அது சாத்தியமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, உயர்தரம் மற்றும் ஏனைய பரீட்சைகளை அதற்கு முன்னர் நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...