12 10
இலங்கைசெய்திகள்

அம்பாந்தோட்டையில் விபத்து: ஒருவர் பலி- மூவர் படுகாயம்

Share

அம்பாந்தோட்டையில் விபத்து: ஒருவர் பலி- மூவர் படுகாயம்

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளொன்று கடற்படை வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விபத்தில் 33 வயதுடைய மோட்டார் சைக்கிள் சாரதி உயிரிழந்துள்ளதுடன், கடற்படை வாகனத்தில் பயணித்த மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவர் மற்றும் காயமடைந்தவர்கள் அம்பாந்தோட்டை பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்து தொடர்பில் அம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
l90920260121101853
செய்திகள்உலகம்

ஜனாதிபதி ட்ரம்பின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: வாஷிங்டனுக்கு அவசரமாகத் திரும்பியது!

சுவிட்சர்லாந்து நோக்கிப் பயணித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் ‘ஏர் ஃபோர்ஸ் ஒன்’ (Air Force...

25095672 tn8
செய்திகள்உலகம்

காசா அமைதி வாரியத்தில் இணையுமாறு புடினுக்கு ட்ரம்ப் அழைப்பு: சர்வதேச அரசியலில் அதிரடித் திருப்பம்!

காசாவின் மறுசீரமைப்பு மற்றும் நிர்வாகத்தைக் கவனிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உருவாக்கியுள்ள அமைதி வாரியத்தில்...

images 6 5
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமூக சீரழிவின் மையமாக மாறும் மண்டைதீவு சுற்றுலாத்தளம்: வேலணை பிரதேச சபையில் உறுப்பினர் அனுசியா கடும் எச்சரிக்கை!

உருவாக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக சமூக சீரழிவின் மையமாக உருவெடுத்துவரும் மண்டைதீவு சுற்றுலாத்தளத்தை சமூக விரோத செயற்பாடுகளின்...

images 7 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

டிட்வா சூறாவளி அனர்த்தம்: 525 பேருக்கு மரணச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் அறிவிப்பு!

டிட்வா (Ditwa) சூறாவளி அனர்த்தத்தினால் உயிரிழந்தவர்களில் இதுவரை அடையாளம் காணப்பட்ட 525 நபர்களுக்கான மரணச் சான்றிதழ்கள்...