இலங்கை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த மற்றும் மைத்திரி தொடர்பில் வெளியான தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த மற்றும் மைத்திரி தொடர்பில் வெளியான தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஜனாதிபதியின் சிறப்பு சலுகையின் கீழ் பொது நிதியை பயன்படுத்தியமை தொடர்பில் ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச(Mahinda Rajapaksa) 2005 மற்றும் 2015 க்கு இடையில் ஜனாதிபதியின் சிறப்புச் சலுகையின் கீழ் விமானப்படை ஹெலிகாப்டர்களை பயன்படுத்தி 978 தடவைகள் விமானம் ஊடாக பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன(Maithripala Sirisena) தனது ஐந்தாண்டு பதவிக்காலத்தில் 557 தடவைகள் விமானம் ஊடாக பயணங்களை மேற்கொண்டுள்ளார்.
இந்த தகவல்களை, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இலங்கை விமானப்படை தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியின் சிறப்புரிமையின் கீழ் உள் விமானங்கள் மூலம் மொத்தம் 131,277.17 கிலோமீட்டர் தூரத்தை பயணித்துள்ளார்.
ஒப்பீட்டளவில், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தனது பதவிக்காலத்தில் விமானப்படை ஹெலிகாப்டர்களை அதிகளவில் பயன்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டு முன்னாள் ஜனாதிபதிகளும் ஹெலிகாப்டர் பயணத்திற்கு பொது நிதியை பயன்படுத்தியதற்காக ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.