1 8
இலங்கைசெய்திகள்

முச்சக்கர வண்டிகள் தொடர்பில் நடவடிக்கை

Share

முச்சக்கர வண்டிகள் தொடர்பில் நடவடிக்கை

முச்சக்கரவண்டிகள் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கண்டி மாவட்டத்தில் 91,615 பதிவு செய்யப்பட்ட முச்சக்கரவண்டிகள் சேவையில் உள்ளன. போக்குவரத்து சட்டத்தின் மூலம் விதிக்கப்பட்டுள்ள முறைமைக்கு இணங்க முச்சக்கர வண்டிகளில் மீற்றர் பொருத்தப்படுவது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, அறவிடப்படும் பணத்திற்கு அதில் பயணிப்போர் பற்றுச் சீட்டு கோருவார்களானால் பற்றுச் சீட்டு வழங்கப்பட வேண்டும். அது தற்போது முறையாக நடைமுறையில் இல்லை. சட்டம் திருத்தப்படும்போது இந்த அனைத்து விடயங்கள் அதில் உள்ளடக்கப்படும்.

அதேபோன்று, பயணிகள் முச்சக்கரவண்டியில் செல்லும்போது சாரதியின் புகைப்படம், முச்சக்கர வண்டியின் இலக்கம் உட்பட விபரங்கள் வளர்ச்சியடைந்த நாடுகளில் உள்ளதைப் போன்று காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு உரிய அனுமதி கிடைத்ததும் ஓரிரு மாதங்களில் இந்த நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 23
செய்திகள்உலகம்

ஈரான் போர்நிறுத்தத்தின் பின்னணியில் சீனா ? டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட முக்கிய தகவல்!

ஈரானுடனான இரண்டு வார காலப் போர்நிறுத்த ஒப்பந்தத்தை “முழுமையான மற்றும் மிகப்பெரிய வெற்றி” என்று அமெரிக்க...

world 22
செய்திகள்உலகம்

ஈரான் விவகாரத்தில் டிரம்பின் தற்காலிகப் போர்நிறுத்தத்தின் பின்னணி!

வளைகுடா பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், அதிபர் டொனால்ட் டிரம்ப் கடைபிடிக்கும் அணுகுமுறையை அரசியல்...

world 21
செய்திகள்உலகம்

மறைந்த தனது மனைவிக்காக நிலவில் பெயர் சூட்டிய விண்வெளி வீரர்!

சுமார் 50 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவை நோக்கிப் பயணித்துள்ள நாசாவின் ‘ஆர்டெமிஸ் II’ விண்கலக் குழுவினர்,...

world 20
செய்திகள்உலகம்

இரு வார காலப் போர்நிறுத்தம்: ஹோர்முஸ் ஜலசந்தியைத் திறக்கத் தெஹ்ரான் சம்மதம்!

ஈரானின் உள்கட்டமைப்புகள் மீது பாரிய தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்திருந்த...