24 667f7cfe0ff26 29
இந்தியாசெய்திகள்

பிரித்தானிய தேர்தலில் வெற்றிபெற்ற ஈழ தமிழ் பெண்ணுக்கு ஸ்டாலின் வாழ்த்து

Share

பிரித்தானிய தேர்தலில் வெற்றிபெற்ற ஈழ தமிழ் பெண்ணுக்கு ஸ்டாலின் வாழ்த்து

பிரித்தானிய தேர்தலில் வெற்றிபெற்ற ஈழ தமிழ் பெண்ணான உமா குமரனுக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.

பிரித்தியனியாவில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது.

இந்த தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த எட்டு பேர் போட்டியிட்ட நிலையில், ஈழ தமிழ் பெண்ணான உமா குமரன் வெற்றிபெற்றுள்ளார்.
}|

இவருக்கு தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அதில், “ஸ்ட்ராட்போர்ட் தொகுதியின் முதல் நாடாளுமன்ற உறுப்பினராகவும், பிரித்தானிய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ்ப் பெண் உறுப்பினராகவும் பதவியேற்கும் உமா குமரனுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்.

தமிழ் சமுதாயத்திற்கு அவர் பெருமை சேர்த்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட உமா குமரன், 19 ஆயிரத்து 145 வாக்குகளுன் வெற்றி பெற்றார்.

கிழக்கு லண்டனில் பிறந்த உமா குமரன் ஸ்ட்ராட்போர்ட் மற்றும் போவ் பகுதியில் வசித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Murder 5
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகரை சந்தித்த செல்வம் அடைக்கலநாதன் எம்பி

இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் சாய் முரளியை தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ சார்பாக கட்சியின்...

Murder 4
இலங்கைசெய்திகள்

கிழக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பில் கலந்துரையாடல்

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண அமைச்சுகள் மற்றும் திணைக்கள...

Murder 2
இலங்கைசெய்திகள்

ரணில் எடுத்த கடுமையான முடிவுகள்! தொடரும் அநுர தரப்பு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கடினமான தீர்மானங்களினால் நாட்டை மீட்க முடிந்தது என நிதி அமைச்சின்...

10
இலங்கைசெய்திகள்

இலங்கையில் சிங்களவர்களுக்கு அநீதி இழைக்கப்பட்டதாம்! சரத் வீரசேகர குற்றச்சாட்டு

இலங்கையில் சிங்கள இனத்துக்கே அநீதி இழைக்கப்பட்டு வருகின்றது எனவும், தமிழ் தரப்பினரை மட்டுமே ஐ.நா. மனித...