1 6
இலங்கைசெய்திகள்

திருகோணமலையில் பெருந்திரளானோர் சம்பந்தனுக்கு இறுதி அஞ்சலி

Share

திருகோணமலையில் பெருந்திரளானோர் சம்பந்தனுக்கு இறுதி அஞ்சலி

இலங்கை தமிழ் அரசு கட்சியின் மூத்த தலைவர் இரா.சம்பந்தனின் பூதவுடல் யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு நேற்று  காலை விமானம் மூலமாக கொண்டுவரப்பட்டது.

தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட கிளைத் தலைவர், கதிரவேலு சண்முகம் குகதாசன், இரா.சம்பந்தனின் மகன் சஞ்சீவன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் சீனக்குடா விமான நிலையத்தில் காத்திருந்து சம்பந்தனின் பூதவுடலை பொறுப்பேற்றனர்.

இதனையடுத்து சம்பந்தனின் பூதவுடல் திருகோணமலையில் உள்ள அவரது இல்லத்துக்கு வாகனம் மூலமாக அஞ்சலிக்காக கொண்டு செல்லப்பட்டது.

இதேவேளை சம்பந்தனின் பூதவுடலுக்கு அரசியல் பிரமுகர்கள், மாவட்ட செயலாளர்கள், உயரதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் (ITK) மூத்த தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனது (R .Sampanthan) பூதவுடல் யாழ்ப்பாணத்தில் (Jaffna) இருந்து  விமானம் மூலம் திருகோணமலைக்கு (Trincomalee) எடுத்துச் செல்லப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் உள்ள தந்தை செல்வா கலையரங்கில் சம்பந்தனின் பூதவுடலுக்கு  பலரும் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இந்த நிலையில் அஞ்சலி நிறைவுக்கு வந்த பின்னர் பூதவுடல் அங்கேயே வைக்கப்பட்டது.

தந்தை செல்வா கலையரங்கில் இருந்து இன்று காலை கார் மூலம் பலாலி விமான நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து திருகோணமலைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.

இதேவேளை சம்பந்தனின் பூதவுடல் திருகோணமலையில் இரண்டு தினங்கள் பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படவுள்ளது.

மேலும்  ஞாயிற்றுக்கிழமை (07) இறுதிக்கிரியைகள் நடைபெற்று தகனம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...