5 13
இலங்கைசெய்திகள்

தேர்தலுக்கு தயாராகுங்கள்: அரச நிறுவனங்களுக்கு வெளியான அறிவிப்பு

Share

தேர்தலுக்கு தயாராகுங்கள்: அரச நிறுவனங்களுக்கு வெளியான அறிவிப்பு

அதிபர் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், அதற்குத் தயாராகுமாறு அரசாங்க அச்சுத் திணைக்கள பிரதானி, காவல்துறை மா அதிபர் மற்றும் பல அரச நிறுவனங்களுக்கு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

அறிவிக்கப்பட்ட நிறுவனங்களில் இலங்கை மின்சார சபை, நீர் வழங்கல் மற்றும் போக்குவரத்து சபை மற்றும் இலங்கை போக்குவரத்து சபை ஆகியவை அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் தேர்தலுக்கான திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு நிர்ணயித்தால் அதற்குத் தேவையான சகல ஏற்பாடுகளும் தயாராக உள்ளதாக அரசாங்க அச்சுத் திணைக்கள பிரதானி கங்கானி கல்பனா லியனகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாடளாவிய ரீதியில் உள்ள வாக்களிப்பு நிலையங்களின் குறைபாடுகள் தொடர்பில் அறிக்கை ஒன்றை வழங்குமாறு அனைத்து கிராம அதிகாரிகளுக்கும் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.எல்.ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அனைத்து மாவட்ட தேர்தல் தலைவர்களுக்கும் அதிகாரிகள் மற்றும் வாகனங்கள் கணக்கெடுக்கும் பணியை மேற்கொள்ளுமாறும் அவர் கூறியுள்ளார்.

இந்த நிலையில், தேர்தலுக்கு தயாராவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு இதுபோன்ற அறிவுறுத்தல்களை வழங்கியதாக தேர்தல் ஆணையம் கூறுகிறது.

இதேவேளை, தேர்தல் செப்டம்பர் 14 முதல் ஒக்டோபர் 16 ஆம் திகதி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் சமீபத்தில் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
09 3
செய்திகள்உலகம்

வட்ஸ்அப் வெப் சேவையில் திடீர் முடக்கம்: ஐபோன் பயனர்கள் கடும் அவதி!

உலகம் முழுவதும் பரவலாகப் பயன்படுத்தப்படும் வட்ஸ்அப் வெப் (WhatsApp Web) சேவையைப் பயன்படுத்துவதில் இன்று திடீர்...

08 3
செய்திகள்இலங்கை

குற்றவாளிகளைத் தேடி: சிவப்பு அறிவித்தல் இன்றி 14 பேர் நாட கடத்தல் – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தகவல்!

சர்வதேச பொலிஸ் (Interpol) சிவப்பு அறிவித்தல்கள் (Red Notice) இன்றி, இதுவரை 14 சந்தேக நபர்களை...

06 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஒரே நாளில் 549 பேர் கைது: பொலிஸாரின் அதிரடி நடவடிக்கையில் போக்குவரத்து விதிமீறல்களும் அடக்கம்!

இலங்கை பொலிஸாரினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட குற்றத்தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது,...

05 3
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இந்தியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட ‘பொடி லெசி’: விசாரணைகளுக்காக காலி குற்றத்தடுப்புப் பிரிவில் ஒப்படைப்பு!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று (பிப்ரவரி 27) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாரிய அளவிலான...