24 667a28e455068
இலங்கைசெய்திகள்

இலங்கை சிறுவனுக்கு குவியும் பாராட்டுக்கள்

Share

இலங்கை சிறுவனுக்கு குவியும் பாராட்டுக்கள்

கம்பஹா மாவட்டத்தின் ஹுனுபிடிய பகுதியில் வசித்துவரும் மொஹமட் ஷபான் மற்றும் பாத்திமா இபாஸா ஆகியோரின் 3 வயதான மகன் மொஹமட் ஷம்லான் உலக சாதனை படைத்துள்ளார்.

பீபில்ஸ் ஹெல்பிங் பீபில்ஸ் பவுண்டேஷன் உடன் இணைந்து சோழன் உலக சாதனை புத்தக நிறுவனம் நடத்திய உலக சாதனை படைக்கும் முயற்சியில் இவர் சாதனை படைத்துள்ளார்.

இதன்போது குறித்த சிறுவன் எண்கள்,பூக்கள், பழங்கள், பறவைகள், விலங்குகள், தானியங்கள், மரக்கறி வகைகள்,மனித உடலின் உள் உறுப்புகள்,ஊர்வன, பூச்சிகள் பூக்கள், மீன்கள், சிங்கள, ஆங்கில, அரேபிய மொழி எழுத்துகள், அரசியல் தலைவர்கள், பல்வேறு தொழில்கள், உலகப் புகழ் பெற்ற கோபுரங்கள், புகழ் பெற்ற கிரிக்கெட் வீரர்கள், தேசிய வீரர்கள், உணவு வகைகள் மற்றும் வீட்டுப் பாவனை பொருட்கள் என 1098 உருவ படங்களை அடையாளம் காட்டியுள்ளார்.

மேலும் அவற்றின் பெயர்களை மனப்பாடமாக கூறி சோழன் உலக சாதனை புத்தகத்தில் தனது பெயரை பதிவு செய்துள்ளார்.

இதன் மூலம் ஷம்லான், 3 வயதில் உலகின் அதிக ஞாபகத் திறன் கொண்ட குழந்தை என்ற பெயரை பெற்றுள்ளார்.

சோழன் உலக சாதனை படைத்த குழந்தை ஷம்லானுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், தங்கப் பதக்கம், நினைவுக் கேடயம் மற்றும் அடையாள அட்டை போன்றவை நடுவர்கள் வழங்கி பாராட்டியுள்ளார்கள்.

இந்நிலையில் 3 வயது சிறுவனின ஞாபகத் திறனையும் அவரது சாதனையையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இந்த சோழன் உலக சாதனை நிகழ்வில் கெலனிய பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் சுனில் ஷாந்த மற்றும் கம்பஹா மாவட்ட ஜமியதுல் உலமா அல் ஹாஜ் நுஹூமான் இனாமி போன்றோர் பங்கு கொண்டு உலக சாதனை படைத்த சிறுவனின் பெற்றோரை வாழ்த்தி பாராட்டினார்கள்.

Share
தொடர்புடையது
MediaFile 2 6
அரசியல்இலங்கைசெய்திகள்

முழு நாடுமே ஒன்றாக தேசிய நடவடிக்கை: நேற்று ஒரே நாளில் 981 பேர் கைது!

இலங்கைப் பொலிஸாரால் ஆரம்பிக்கப்பட்டுள்ள ‘முழு நாடுமே ஒன்றாக’ (The Whole Country Together) என்ற தேசிய...

puthiyathalaimurai 2024 01 760c263d 5433 4158 8378 13068b38fb78 river
இந்தியாசெய்திகள்

புதுடெல்லி கடும் பனிமூட்டம்: 100 விமானங்கள் ரத்து, ரயில் சேவைகள் பாதிப்பு!

புதுடெல்லி உட்படப் பல்வேறு வட மாநிலங்களில் தற்போது கடும் குளிர் நிலவி வருவதால், அதிகாலை மற்றும்...

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தை
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் பயணிகள் முனையக் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு வைபவம்!

யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் புதிய பயணிகள் முனையக் கட்டிடம் (Passenger Terminal Building) அமைப்பதற்கான அடிக்கல்...

25 693c2181e5b05
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இலங்கையில் மண்சரிவு அபாயம்: முன்னெச்சரிக்கை அறிவிப்புகள் மற்றும் அபாயக் கட்டங்கள்!

மண்சரிவு என்பது உலகம் முழுவதும் மழைவீழ்ச்சி, நிலநடுக்கம், பனிப்பாறைகளின் செயற்பாடுகள் காரணமாக ஏற்படும் ஒரு இயற்கையான...