tamilni Recovered 6 scaled
இலங்கைசெய்திகள்

யாழ் இளைஞனிடம் பாரிய பண மோசடி : பிரித்தானிய புலம்பெயர் தமிழர் அதிரடியாக கைது

Share

யாழ் இளைஞனிடம் பாரிய பண மோசடி : பிரித்தானிய புலம்பெயர் தமிழர் அதிரடியாக கைது

பிரித்தானியாவில் (UK) வேலை பெற்றுத் தருவதாக கூறி யாழ்ப்பாண (Jaffna) இளைஞன் ஒருவரிடம் பண மோசடி செய்த குற்றச்சாட்டில் புலம்பெயர் தமிழர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அந்தவகையில், கைதான நபர் அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தவேளை, லண்டனில் உள்ள பல்பொருள் அங்காடியொன்றில் வேலை பெற்றுத் தருவதாக கூறி இளைஞனிடம் 80 இலட்சம் ரூபாய் பணத்தினை பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் தெரியவருகையில், பணத்தை பெற்றுக்கொண்ட சந்தேக நபர், இளைஞரை லண்டனுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை எடுக்காததால், சந்தேகம் கொண்ட இளைஞன் தனது பணத்தை மீள தருமாறு கோரியுள்ளார்.

எனினும், அந்த லண்டன் பிரஜை பணத்தை திருப்பித் தராததால் இளைஞன் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து, காவல்துறையினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக, வெளிநாடுகளில் பிரஜாவுரிமை பெற்றவர்கள் வெளிநாடுகளில் வேலை பெற்றுத் தருவதாக யாழ்ப்பாண இளைஞர்கள், யுவதிகளை இலக்கு வைத்து பண மோசடியில் ஈடுபட்டுவரும் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

மேலும், இது தொடர்பில் விழிப்பாக இருக்குமாறும் காவல்துறையினர் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
20 2
இந்தியாசெய்திகள்

கரூர் துயரம் – ஆட்டம் காணும் த.வெ.க..! சி.பி.ஐ விசாரணையை கோரிய மோடி தரப்பு

தவெக தலைவர் விஜயின் கரூர் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்...

19 2
இலங்கைசெய்திகள்

யாழில் கைதான பெண் சட்டத்தரணி – வடக்கில் வெடித்த போராட்டம்

உரிய வகையில் தேடுதல் ஆணை இல்லாது காவல்துறையினரால் சோதனை முன்னெடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து...

18 3
இலங்கைசெய்திகள்

சிறிலங்காவின் போர்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை அறிவித்த ஐ.நா

இலங்கை தொடர்பான மனித உரிமை மீறல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கான ஆதாரங்களை சேகரிக்கும் திட்டத்தை...

17 3
இலங்கைசெய்திகள்

மகிந்தவின் பாதுகாப்பு! நிலைப்பாட்டை அறிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர்

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பில் எவ்வித குறைப்பும் செய்யப்பட்டவில்லை. அவர்கள் கோரும் பாதுகாப்பு வழங்கப்படும்...