tamilni Recovered 1 scaled
உலகம்செய்திகள்

பிரித்தானிய தேர்தலில் களமிறங்கும் மற்றுமொறு யாழ் ஈழத்தமிழ் பெண் !

Share

பிரித்தானிய தேர்தலில் களமிறங்கும் மற்றுமொறு யாழ் ஈழத்தமிழ் பெண் !

இலங்கையின் (Sri Lanka) வடக்கே யாழ்ப்பாணம் (Jaffna) இளவாலையை பூர்வீகமாகக் கொண்ட கிருஷ்ணி ரிஷிகரன் (Chrishni Reshekaron) பிரித்தானியாவின் (United Kingdom) நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

கடந்த 20 வருடமாக சட்டன் பகுதியில் வசித்துவரும் கிருஷ்ணி ரிஷிகரன் சட்டன் மற்றும் செம் (Sutton and Cheam) ஆகியவற்றிற்கான நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடவுள்ளார்.

அத்தோடு, சட்டன் மற்றும் செம் ஆகியவை தனது சிறுவயது வாழ்விடமாக இருந்ததாக தெரிவிக்கும் அவர், தான் புனித.பிலோமினா பாடசாலையில் கல்வி கற்றதையும் இந்தச் சமுதாயத்தில் வளர்ந்து வந்ததையும் நினைவுகளாக மீட்டுப் பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், ஒரு குடும்பமாக தாம் பல போராட்டங்களை எதிர்கொண்டாலும் இங்குள்ள சமூகத்தின் ஆதரவே தான் இன்று இந்த நிலைக்கு வர உதவியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், சட்டத் தொழிலைத் தொடர்ந்து குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மாற்றும் பிரித்தானியாவின் முன்னணித் தொண்டு நிறுவனத்தில் இப்போது பணிபுரியும் கிருஷ்ணி ரிஷிகரன் கவுன்சிலராக இருந்து மக்கள் எதிர்நோக்கும் வீட்டுப் பிரச்சனைகள் தொடர்பிலும் கவனஞ் செலுத்துகின்றார்.

மேலும், தாராளவாத சனநாயகக் கட்சியுடன் கூட்டணி வைத்த பழமைவாத அரசாங்கமானது கடந்த 14 ஆண்டுகாலத்தில் பிரித்தானியாவை பலவீனப்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 72
செய்திகள்உலகம்

ஆர்ட்டெமிஸ் II விண்வெளி வீரர்களுக்கு டொனால்ட் டிரம்ப் பாராட்டு: வெள்ளை மாளிகையில் சந்திக்க விருப்பம்!

ஆர்ட்டெமிஸ் II (Artemis II) விண்கலக் குழுவினர் நிலவைச் சுற்றி வந்து பூமியில் பாதுகாப்பாகத் தரையிறங்கியதைத்...

world 71
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாட்டில் உரங்களுக்குத் தட்டுப்பாடு இல்லை: உர மானியத்தையும் உயர்த்திப் பிரதி அமைச்சர் உறுதி!

நாட்டில் உரங்களுக்கு எவ்வித பற்றாக்குறையும் இல்லை என்றும், எதிர்வரும் சாகுபடிப் பருவத்திற்குத் தேவையான அளவை விட...

world 70
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று நண்பகலில் பல பகுதிகளில் சூரியன் நேர் உச்சியில்: மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை!

இலங்கையின் நிலப்பரப்பிற்கு மேலாக சூரியனின் வருடாந்த தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக, இன்று (ஏப்ரல் 11,...

world 69
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வேரஹேராவில் போலி சாரதி அனுமதிப்பத்திர மோசடி முறியடிப்பு: பாதுகாப்பு அதிகாரி உட்பட இருவர் கைது!

வேரஹேராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்திற்கு (DMT) வருகை தரும் நபர்களை ஏமாற்றி, போலி சாரதி...