images 18
சினிமாசெய்திகள்

நண்பன் படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?

Share

நண்பன் படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?

நடிகர் விஜய், அவரது நடிப்பில் அடுத்து தமிழ் சினிமாவில் கோட் படம் வெளியாக இருக்கிறது. The Greatest Of All Time என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

படத்திற்கான படப்பிடிப்பு தமிழ்நாடு, கேரளா, ரஷ்யா என மாறி மாறி நடந்தது. அண்மையில் விஜய்யின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கோட் படத்தில் இடம்பெறும் சின்ன சின்ன என 2வது பாடல் வெளியாகி இருந்தது.

இதில் விஜய்-சினேகா இடம்பெற்றிருந்தார்கள், பாடலுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

விஜய் காதல், ஆக்ஷன், மாஸ் என எந்த ஜானரில் நடித்தாலும் கில்லி போல கலக்கிவிடுவார்.

அப்படி அவர் புகுந்து விளையாடும் ஒரு ஜானர் என்றால் அது காமெடி தான். அப்படி காமெடிக்கு பஞ்சம் இல்லாமல் உருவான படம் தான் நண்பன்.

சேத்தன் பகத் எழுதிய Five Point Someone என்ற நாவலை தழுவி ஹிந்தி 3 இடியட்ஸ் படம் வந்தது. அதனை தமிழில் நண்பன் என்ற பெயரில் ரீமேக் செய்தார்கள். விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த். சத்யராஜ், இலியானா என பலர் நடித்திருந்தார்கள்.

ஆனால் இந்த படத்தில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தேர்வானது சூர்யா தானாம். இந்த தகவலை சேத்தன் பகத் தனது டுவிட்டரில், இன்று மும்பையில் ஜிம்மில் தமிழ் சூப்பர் ஸ்டார் சூர்யாவை சந்தித்தேன்.அவர் 3 இடியட்ஸ் தமிழில் நடிக்கிறார் என பதிவிட்டிருக்கிறார். 2010ம் ஆண்டு அவர் பதிவிட்ட டுவிட் இப்போது சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...