உலகம்
12 வயதில் அமெரிக்க பாடசாலையில் சாதனை படைத்த இந்திய வம்சாவளி சிறுவன்!
12 வயதில் அமெரிக்க பாடசாலையில் சாதனை படைத்த இந்திய வம்சாவளி சிறுவன்!
அமெரிக்காவில் இந்திய வம்சாவளி சிறுவன் ஒருவன் தனது 12 வயதில் உயர்நிலைக் கல்வியை முடித்து சாதனை படைத்துள்ளார்.
இப்போது, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் சேர்ந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
அதிசயக் குழந்தையாக பார்க்கப்படும் இந்த அறிவு மிகுந்த சிறுவன், 4-ஆம் வகுப்பிலிருந்து 8-ஆம் வகுப்பிற்கும், பின்னர் 9-ஆம் வகுப்பிலிருந்து 12-ஆம் வகுப்பிற்கும் சென்று தனது 12 வயதில் உயர்நிலை கல்வியை அசாதாரணமாக முடித்து தேர்ச்சி பெற்றார்.
அமெரிக்காவின் Long Island பாடசாலையில் மிக இளம் வயதில் உயர்நிலைக் கல்வியை முடித்த மாணவர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
அவர் பெயர் சுபோர்னோ பாரி (Suborno Bari). அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் Lynbrook பகுதியில் வசிக்கிறார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பாரி, இதுவரை இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளர். இந்தியாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாற்றியுள்ளார் (Lecture).
வரும் ஜூன் 26-ஆம் திகதி Malverne உயர்நிலை பாடசாலையில் டிப்ளமோ பெறவுள்ளார். அவர் தனது 11 வயதில் SAT தேர்வில் 1500 மதிப்பெண்களை எடுத்துள்ளார்.
இப்போது, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் (NYU) கணிதம் மற்றும் இயற்பியல் படிக்கப் போகிறார்.