24 6676d1cfd13c0 scaled
இலங்கைஏனையவைசெய்திகள்

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு

Share

மனிதாபிமான கண்ணிவெடி அகற்றும் பணி தொடர்ந்தும் முன்னெடுப்பு\

மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற ஸார்ப் நிறுவனமானது கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் இன்று வரையான காலப்பகுதியில் முப்பது இலட்சத்து பதினாறாயிரத்து அறுநூற்று எண்பத்தொரு சதுரமீற்றர் பரப்பளவில் இருந்து அறுபத்தாறாயிரத்து இருநூற்று முற்பததெட்டு அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.

இலங்கையின் வடபகுதியில் மனிதாபிமான கண்ணிவெடியகற்றலில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா நாட்டு நிதியுதவியுடன் ஈடுபடும் ஸார்ப் (sarp)மனிதாபிமானக் கண்ணிவெடியகற்றும் அரச சார்பற்ற நிறுவனமானது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தொடக்கம் இன்று வரையான காலப்பகுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள தச்சடம்பன் அம்பகாமம் ஒழுமடு மற்றும் மாங்குளம் கொக்காவில் பகுதியிலும் ,புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள சுதந்திரபுரம் மல்லிகைத்தீவு புதுக்குடியிருப்பு மேற்கு கிழக்கு மண்ணாகண்டல் பகுதியிலும், கிளிநொச்சி மாவட்டத்தின் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள முகமாலை இயக்கச்சி மற்றும் ஆனையிறவிலும் முப்;பது இலட்சத்து பதினாறாயிரத்து அறுநூற்று எண்பத்தொரு சதுரமீற்றர் பரப்பளவில் (301668) இருந்து அறுபத்தாறாயிரத்து இருநூற்று முற்பததெட்டு (66238) அபாயகரமான வெடிபொருட்களை அகற்றியுள்ளதாக ஸார்ப் நிறுவனத்தின் நடவடிக்கை முகாமையாளர் கப்டன் பிரபாத் நாரம்பனவ தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இந்நிறுவனம் கண்ணிவெடியகற்றும் பணிகளை புதுக்குடியிருப்பு ஒழுமடு மாங்குளம் கொக்காவில் மற்றும் ஆனையிறவிலும் துரித கதியில் முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
Semmani Manhole
இலங்கை

எழுமாறாக தோண்டப்பட்ட குழிகளிலும் எலும்புக்கூடுகள்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை முன்னெடுக்கப்பட்ட 101 நாள் அகழ்வுப் பணிகளில் மொத்தம் 515 மனித...

Namal
இலங்கை

நாங்கள் மனித நேயத்துடன் மட்டுமே செயலாற்றுவோம் – நாமல்.

மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச, மொட்டுக் கட்சியின் பிரசாரக் கூட்டம் ஒன்றில் உரையாற்றும்...

Court order
இலங்கை

மீண்டும் நீதிமன்றுக்கு வந்த பவானி வீதி வழக்கு – நீதிமன்று வழங்கிய தீர்ப்பு !

தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பவானி வீதியை விடுவிப்பதற்குத் தடைபோடும் வகையில் பலாலி காவல்துறையினரின் சார்பில்...

Weaponsgdg
இலங்கை

கலவரத்தினை கட்டுப்படுத்த ஏற்பட்ட தாமதம் – சிறைகளில் உள்ள ஆயுத பற்றாக்குறைகள்

நாட்டில் உள்ள ஒன்பது சிறைச்சாலைகளில் பல்வேறு துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் 2,327 தோட்டாக்கள் நீண்டகாலமாகப் பயன்படுத்த முடியாத...