இன்றைய ராசி பலன் 21.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan
மேஷம் ராசி பலன்
மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று எந்த வித விவாதத்திலும் ஈடுபட வேண்டாம். இன்று உங்களின் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள். நீங்கள் தொடங்கக்கூடிய எந்த ஒரு தொழிலிலும் நல்ல வெற்றி கிடைக்கும். உங்களின் தன்னம்பிக்கை அதிகரிக்கும். இன்று உங்கள் பணியிடத்தில் வேலைப் பளு அதிகரிக்கும். உங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். குடும்பப் பொறுப்புகள் அதிகரிக்கும். இன்று சகோதரர்களின் நல்ல ஆதரவு மனம் மகிழ்ச்சியைத் தரும்.
ரிஷபம் ராசி பலன்
ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் தங்களின் அறிவு மற்றும் அனுபவத்தால் புதிய வாய்ப்புகளைப் பெறுவீர்கள். தேர்வில் சிறப்பான வெற்றி கிடைக்கும். வியாபாரம் செய்ய கூடியவர்களுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நல்ல நாள். சமூகத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் சாதகமான நாளாக இருக்காது. இன்று உங்களின் நிதி நிலை மேம்படும். தேவையற்ற செலவுகளைத் தவிர்க்க வேண்டிய நாள்
மிதுனம் ராசி பலன்
மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று திருமணம் முயற்சியில் உள்ளவர்களுக்கு நல்ல தகவல் தேடி வரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். இன்று வியாபாரத்தில் சாதகமான மாற்றங்களைப் பெறுவீர்கள். அதன் மூலம் நல்ல லாபம் அடைவீர்கள். நீங்க நாட்களாக தடைப்பட்டிருந்த வேலைகளை இன்று செய்து முடிக்க வாய்ப்பு கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் சில நல்ல ஆலோசனைகள் கிடைக்கும்.
கடகம் ராசி பலன்
கடக ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரம் செய்பவர்களுக்கு, புதிய திட்டத்தின் மூலம் நல்ல பலன் பெறுவீர்கள். பொருளாதார ரீதியாக சிரமங்களை சந்திக்க நேரிடும். குடும்ப உறவுகள் வலுவாக இருக்கும். உங்கள் குடும்ப செலவுகள் அதிகரிக்கும் என்பதால் கவனம் தேவை. இன்று பணியிடத்தில் சில சிரமங்களை சந்திக்க நேரிடும். உங்களின் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும். இன்று யாரிடமும் வாக்குறுதி கொடுப்பதும், சவால் விடுவதும் கூடாது. உங்கள் பேச்சை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
சிம்மம் ராசி பலன்
சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று வண்டி, வாகன பயன்பாட்டில் கூடுதல் கவனம் தேவை. வியாபாரத்தில் விரும்பிய சில நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் சொத்து சம்பந்தமான தகராறுகள் தீரும். நண்பர்கள், சகோதரர்களின் உதவியால் உங்கள் வேலைகள் சிறப்பாக செய்து முடிக்க வாய்ப்பு கிடைக்கும். இன்று பணப்பதிவுதனைகளை கவனமாக செய்யவும். மாணவர்களுக்கு சிறப்பான நாள். இன்று உங்களுக்கு விருப்பமான வீட்டு உபயோகப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கன்னி ராசி பலன்
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று மாணவர்கள் நல்ல வெற்றி பெற முடியும். இன்று உங்களின் எதிர்காலம் தொடர்பாக சிந்தனை மேலோங்கும். உங்கள். இனிமையான பேச்சு பிறரை ஈர்க்கும். குடும்ப சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக அமையும். காதலில் உங்களுக்கு பரிசு கிடைக்க வாய்ப்பு உள்ளது. இன்று ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வெளியில் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். புதிய வேலை தேடுபவர்களுக்குத் திறமைக்கேற்ற நல்ல வாய்ப்புகள் அமையும்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று ஆன்மீக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். பிள்ளைகளின் திருமணம் தொடர்பான மன கவலை தீரக்கூடிய நாள். வியாபாரிகள் சந்தித்து வந்த பிரச்சனைகள் விலகி முன்னேற்றம் அடைவீர்கள். புதிய திட்டங்கள் நல்ல பலனைத் தரும். இன்று அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். நிதி நிலைமை முன்னேற்றம் அடையும். பணியிடத்தில் நேர்மறையான சிந்தனையுடன் செயல்பட வெற்றி உண்டாகும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியை தரும்.
விருச்சிகம் ராசி பலன்
விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு சாதகமற்ற சூழல் உள்ளது. இன்று உங்கள் காதலில் புதிய அனுபவத்தை பெறுவீர்கள். என்ற பெண் நண்பர்கள் மூலம் பணியிடத்தில் நல்ல முன்னேற்றம் அடைவீர்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களின் மூலம் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று நீங்கள் நிதி சுமையை எதிர்கொள்ள நேரிடும். எந்த ஒரு பண பரிவர்த்தனைகளிலும் கவனம் தேவை. முடிந்தால் தவிர்க்கவும்.
தனுசு ராசி பலன்
தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று கவனமாக எதிலும் செயல்பட வேண்டிய நாள். பணியிடத்தில் எதிரிகள், பொறாமை பிடித்த பிடித்தவர்கள் மூலம் பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். இன்று உங்கள் மனக்குழப்பத்தைப் பெற்றவருடன் பேசுவது நல்லது. குடும்பத்தில் வாழ்க்கை துணையின் ஆதரவு அதிகரிக்கும். உங்களின் தொழில் தொடர்பான முயற்சிகள் வெற்றியைத் தரும். இன்று ஆரோக்கியத்தில், உணவு விஷயத்தில் கவனம் தேவை.
மகரம் ராசி பலன்
மகர ராசி அன்பர்களுக்கு இன்று காதல் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்த நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைத்து வெற்றி அடைவீர்கள். உங்கள் துணைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. இந்த குடும்பத்தில் மூத்த உறுப்பினர்களின் ஆலோசனை நற்பலனை தரும். உங்கள் வேலையில் கடின உழைப்பும், புத்திசாலித்தனமும் சிறப்பான பலனை தரும். பணியிடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.
கும்பம் ராசி பலன்
கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் தொடர்புள்ள நபர்களுக்கு நல்ல முன்னேற்றம், தொண்டர்களின் ஆதரவு பிறக்கும். பெற்றோர் சேவையில் ஈடுபடுவீர்கள். காதல் வாழ்க்கையில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் நிலவும் குழப்பங்கள் தீரும். இன்று பயணங்கள் செல்ல வாய்ப்பு உள்ளது. உங்கள் மனம் மகிழ்ச்சி அடையும். உங்களின் கோபத்தை கட்டுப்படுத்த வேண்டிய நாள்.
மீனம் ராசி பலன்
மீன ராசி அன்பர்களுக்கு இன்று நீண்ட நாட்களாக தடைப்பட்டு உள்ள வேலைகள் முடிக்க முடியும். மாணவர்கள் படிப்பில் முன்னேற்றத்தை காணலாம். சொத்து தொடர்பான விஷயத்தில், வழக்குகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் வீட்டில் மனக்கசப்பு அதிகரிக்கும். காதல் வாழ்க்கையில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். சண்டை சச்சரவுகள் தீரும்
- 2023 rasi palan
- 2024 rasi palan
- daily palan
- Featured
- nalaiya rasi palan
- palaya padam
- pugazh media rasi palan
- raasi palan
- rasi palan
- rasi palan today
- rasi palan today tamil
- shelvi rasi palan
- sun tv rasi palan
- sun tv rasi palan today
- Today Rasi Palan
- vaara rasi palan vendhar
- vara rasi palan
- vara rasi palan shelvi
- vendhar tv rasi palan
- vendhar tv weekly rasi palan
- vendhar vara rasi palan
- vidyadharan rasi palan