26 3
உலகம்செய்திகள்

தெற்கு காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்: நெருக்கடியில் இஸ்ரேலிய பிரதமர்

Share

தெற்கு காசாவில் தற்காலிக போர் நிறுத்தம்: நெருக்கடியில் இஸ்ரேலிய பிரதமர்

காசா பகுதியில் இஸ்ரேல் (Israel) தமது இராணுவ நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக அறிவித்துள்ளது.

காசா பகுதியை இஸ்ரேலில் இருந்து பிரிக்கும் கெரெம் ஷாலோம் எல்லைப் பகுதியில் மட்டுமே போர் நிறுத்தம் நடைமுறையில் இருக்குமென இஸ்ரேல் குறிப்பிட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தெற்கு காசாவில் மனிதாபிமான உதவிக் குழுக்கள் உள் நுழைவதற்கு அனுமதி வழங்கியே இந்த போர்நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், தெற்கு காசா பகுதியில் உள்ள ரஃபாவில் இராணுவ நடவடிக்கைகள் தொடரும் என்று இஸ்ரேலிய இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, பாலஸ்தீனத்திற்கு எதிராக தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து இஸ்ரேல் அரசுக்கு எதிராக அந்நாட்டு மக்களின் போராட்டம் தீவிரமடைந்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகுவை (Benjamin Netanyahu) பதவி விலகுமாறும் அந்நாட்டு மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில், போரில் இஸ்ரேலுக்கு ஆதரவான அமெரிக்காவின் (united state of America) நிலைப்பாட்டை எதிர்த்தும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

அமெரிக்காவில் மட்டும் 50க்கும் அதிகமான பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

போராடும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களை அந்நாட்டு காவல்துறை கைது செய்து வருகிறது. தற்போது வரை 900க்கும் அதிகமானோர் கைதாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...