4 7
இலங்கைசெய்திகள்

யாழ்.காவல் நிலையத்தில் இருந்து தப்பிச் சென்ற கைதிக்கு நேர்ந்த கதி

Share

யாழ்ப்பாணம் காவல்நிலையத்திலிருந்து தப்பிச்சென்ற கைதியொருவர் போதைப்பொருளுடன் கிளிநொச்சி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிளிநொச்சி அக்கராயன் காட்டுப்பகுதியில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்தபோது குறித்த நபர் யாழ்ப்பாண பிராந்திய காவல்துறை புலனாய்வு பிரிவினரால் இன்று (17) கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிடமிருந்து 3.800 கிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டதுடன், மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாண பிராந்திய காவல்துறை குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கபட்டுள்ளார்.

அத்துடன், கைது செய்யப்பட்ட நபர் யாழ் மாவட்டத்தில் பல குற்றச்செயல்களுக்காக நீதிமன்றங்களினால் திறந்த பிடியாணை விதிக்கப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மே மாதம் 12 ஆம் திகதி குறித்த கைதி யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த போது காவல் நிலையத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தார்.

இதன் காரணமாக இரண்டு காவல்துறை உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...