5 4
இலங்கைசெய்திகள்

எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் தகவல்

Share

எரிபொருள் விலைகளில் ஏற்பட்டுள்ள மாற்றம் தொடர்பில் தகவல்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைவினால் நாட்டு மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப் போவதில்லை என பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கணிசமாகக் குறையாததால் போக்குவரத்துச் செலவு மற்றும் பொதுவான வாழ்க்கைச் செலவு குறைவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2023 செப்டெம்பர் மாதத்தில் இலங்கையில் 95 ரக பெட்ரோலின் விலை சுமார் 420 ரூபாவாக இருந்ததாகவும், தற்போதும் அதே விலையே இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு செப்டெம்பர் மாத நிலவரப்படி, ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள், 68 டொலராக குறைந்துள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் 83 டொலராக அதிகரித்து, கடந்த ஜூன் மாதம் 74 டொலராகக் குறைந்துள்ளது.

அதாவது செப்டம்பர் 2023 முதல் தற்போது வரை ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை 27 சதவீதம் குறைந்துள்ளது.

இதற்கமைய, இலங்கையில் பெட்ரோலின் விலை 2023 செப்டெம்பர் மாதத்திற்குள் சுமார் 420 ரூபாவாக இருந்த நிலையில், இன்று வரை விலை அப்படியே உள்ளது.

2023 செப்டெம்பர் மாதத்திற்குள் 92 ரக பெட்ரோல் ஒன்றின் விலை 365 ரூபாவாக இருந்த நிலையில் இன்று 10 ரூபாவினால் குறைந்து 355 ரூபாவாகியுள்ளது.

அதாவது லங்கா ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை கடந்த வருடம் செப்டெம்பர் மாதத்திற்குள் 351 ரூபாவாக இருந்த நிலையில் இன்று 11 வீதத்தினால் 317 ரூபாவாக குறைந்துள்ளது.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வரை லங்கா சுப்பர் டீசல் லீற்றர் ஒன்றின் விலை 421 ரூபாவாக இருந்த நிலையில், இன்று ஒரு லீற்றரின் விலை 377 ரூபாவாகும். அதாவது 12 சதவீதம் குறைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...