26 1
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசாங்கத்தை விமர்சித்த அமெரிக்க தூதுவர்

Share

இலங்கை அரசாங்கத்தை விமர்சித்த அமெரிக்க தூதுவர்

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung), யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட தமது அண்மைய விஜயங்களின் போது இலங்கை அரசாங்கத்தின் திறமையின்மையை விமர்சித்துள்ளார்.

கடந்த 7ஆம் திகதியன்று, நியூயோர்க்கின் (New York) காசில்டன் கோர்னர்ஸில் உள்ள ஸ்டேட்டன் தீவு இந்துக் கோயிலுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்ட வேளை தீவில் உள்ள தமிழ் அமெரிக்க சமூகத்தைச் சந்தித்து கலந்துரையாடலை மேற்கொண்ட போதே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பில் இலங்கையில் ஜனநாயகம், பொறுப்புக்கூறல் மற்றும் அரசியல் சீர்திருத்தத்தை மேம்படுத்துவதற்கான தனது முயற்சிகளை மையமாகக் கொண்டு ஜூலி சங் உரை நிகழ்த்தினார்.

அத்துடன் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கிற்கு தாம் மேற்கொண்ட பல விஜயங்களை அவர் எடுத்துரைத்தார்.

குறிப்பாக மே 18 அன்று யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட தமது அண்மைய விஜயத்தையும் அவர் நினைவூட்டினார்.

தமது விஜயங்களின் போது, முன்னாள் போர் வலயங்களில் குறிப்பிடத்தக்க இராணுவ பிரசன்னம், பயங்கரவாதத் தடைச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்பட்டமை மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார்களின் தொடர்ச்சியான போராட்டங்கள் ஆகியவற்றை தாம் அவதானித்ததாக குறிப்பிட்ட சங் காணாமல் போனோர் அலுவலகத்தின் திறமையின்மையையும் அவர் விமர்சித்தார்.

இந்நிலையில், யாழ்ப்பாணத்தில் அமெரிக்க மையத்தை நிறுவுதல், மத்திய கிழக்கில் ஒரு புதிய மையத்திற்கான திட்டங்கள் உட்பட பல்வேறு முயற்சிகள் குறித்தும் சங் அங்கு விவாதித்தார்.

விரைவில் யாழ்ப்பாணத்தில் ஆங்கிலம் கற்பிக்க தன்னார்வலர்களை அமெரிக்கா அனுப்பும் என்றும் ஜூலி சங் தெரிவித்தார்.

மேலும், வலுவான ஜனநாயகத்தை பேணுதல், கடல் பாதுகாப்பை உறுதி செய்தல் மற்றும் புவிசார் அரசியல் பிரச்சினைகளுக்கு தீர்வு காணுதல் என்ற மூன்று முக்கிய மூலோபாய நலன்களையே அமெரிக்கா இலங்கையில் விரும்புகிறது என்றும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 99
உலகம்செய்திகள்

அணு ஆயுத விவகாரத்தில் முட்டுக்கட்டை: அமைதி ஒப்பந்தம் இன்றி இஸ்லாமாபாத் பேச்சுவார்த்தை நிறைவு!

ஈரான் தனது அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் பிரதான நிபந்தனையை ஏற்க...

world 98
செய்திகள்உலகம்

ஹைட்டியில் சுற்றுலாத் தளத்தில் பயங்கரம்: கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் பலி!

ஹைட்டியின் வடக்கு கிராமப்புற பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கோட்டை ஒன்றில் சனிக்கிழமையன்று ஏற்பட்ட பாரிய...

world 97
செய்திகள்உலகம்

ஈரான் இனி பழைய ஈரான் அல்ல: அணுசக்தி திட்டங்களை முறியடித்துவிட்டதாக நெதன்யாகு அதிரடி அறிவிப்பு!

ஈரானுக்கு எதிரான போரில் இஸ்ரேல் “வரலாற்றுச் சாதனைகளை” படைத்துள்ளதாகவும், அதன் அணுசக்தி லட்சியங்கள் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் இஸ்ரேலியப்...

world 96
செய்திகள்உலகம்

14 மணிநேரப் பேச்சுவார்த்தைக்குப் பின் அமெரிக்கா – ஈரான் இடையில் எஞ்சியுள்ள முரண்பாடுகள்!

மத்திய கிழக்கில் ஆறு வாரங்களாக நீடித்து வரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, பாகிஸ்தான் தலைநகர்...