12 3
இலங்கைசெய்திகள்

பெருமளவு கடவுச்சீட்டு பல ஆவணங்களுடன் சிக்கிய பெண்

Share

பெருமளவு கடவுச்சீட்டு பல ஆவணங்களுடன் சிக்கிய பெண்

களனி பிரதேசத்தில் போலியான ஆவணங்களுடன் பெண் ஒருவர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர் ஜாஎல பகுதியில் உள்ள அவரது வீட்டில் வைத்து களனி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, ​​5000 ரூபா போலி நாணயத்தாள், போலி தேசிய அடையாள அட்டை, 8 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள், 2 வெளிநாட்டு தேசிய அடையாள அட்டைகள், வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரம், அரசாங்கத்தின் 11 இறப்பர் முத்திரைகள் மற்றும் ஏனைய ஆவணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

ஜாஎல பிரதேசத்தில் வசிக்கும் 53 வயதான இந்த பெண் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட பெண் வத்தளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...