இலங்கை
சஜித் தரப்புடன் இணையும் முக்கியஸ்தர்கள்
சஜித் தரப்புடன் இணையும் முக்கியஸ்தர்கள்
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கூட்டணி அமைப்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழப்பெரும, தயாசிறி ஜயசேகர மற்றும் ரொசான் ரணசிங்க ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தலில் கூட்டணியொன்றை அமைத்துக் கொள்வது குறித்து பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கடந்த பொதுத் தேர்தலில் இந்த மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனாதிபதி மற்றும் பொதுத் தேர்தலை இலக்கு வைத்து பல்வேறு தரப்பினர் தேர்தல் கூட்டணிகளை அமைத்துக் கொள்வதில் நாட்டம் காட்டி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.