23 64010deba1764
இலங்கைசெய்திகள்

தேரர் தாக்கியதில் உயிரிழந்த முதியவர்

Share

தேரர் தாக்கியதில் உயிரிழந்த முதியவர்

குருநாகல் (Kurunegala) – கிரிஉல்ல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாரவிட பிரதேசத்தில் தேரர் ஒருவரின் தாக்குதலுக்குள்ளான முதியவர் உயிரிழந்துள்ளதாக கிரிஉல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம் (08.06.2024) இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கிரிஉல்ல மாரவிட பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் காயமடைந்த நிலையில், முதியவர் ஒருவர் இருப்பதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து, பொலிஸார் அவரை மீட்டு தம்பதெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

குறித்த பகுதியை சேர்ந்த 72 வயதுடைய முதியவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதோடு அவரின் உறவினரான தேரர் ஒருவரினாலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறித்த தேரர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் எனவும் அவர் விகாரையொன்றில் பணிபுரியாமல் தனது தாயின் வீட்டில் வசித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், சந்தேகநபரான தேரர் தப்பிச் சென்றுள்ளதோடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
image 1200x800 14 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட கொலை வழக்கு: சந்தேகநபர்களுக்குத் தடுப்புக்காவல்! – நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகள் நீதிமன்றில் திரண்டனர்!

சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட...

images 1 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஜிந்துபிட்டி துப்பாக்கிச் சூடு: இரு பொலிஸ் அதிகாரிகள் கைது! – தலைமையகம் அதிரடி நடவடிக்கை!

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் கடந்த சனிக்கிழமை (14) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது, தமது...

image 1200x800 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீகிரியாவில் சோகம்: காட்டு யானை தாக்கியதில் ஹங்கேரி நாட்டுச் சுற்றுலாப் பயணி பலி!

இலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுற்றுலாத் தலமான சீகிரியா மற்றும் பிதுரங்கலை மலைக்கு இடைப்பட்ட காட்டுப்பகுதியில், காட்டு...

image 1200x800 35
செய்திகள்இலங்கை

ஓய்வுக்காலத்தின் சொர்க்கபுரி இலங்கை! – 2026-இல் உலகின் மிக மலிவான நாடாக முதலிடம்; ‘Travel + Leisure’ புகழாரம்!

உலகின் முன்னணி பயண மற்றும் வாழ்க்கைமுறை சஞ்சிகையான ‘Travel + Leisure’, 2026-ஆம் ஆண்டில் ஓய்வுபெற்ற...