24 665a92d204827
இலங்கைசெய்திகள்

இலங்கை கடவுச்சீட்டு விநியோகத்தில் பாரிய மோசடி…!

Share

இலங்கை கடவுச்சீட்டு விநியோகத்தில் பாரிய மோசடி…!

வெளிநாட்டில் தங்கியிருக்கும் பாதாள உலக குழுவினருக்கு கடவுச்சீட்டு வழங்கும் போது அவர்களின் உண்மையான பெயர்களுக்கு மேலதிகமாக போலியான பெயர்களிலும் தயார் செய்யப்பட்டமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவற்றில் பெரும்பாலானவை வவுனியா அலுவலகத்தில் அச்சிடப்பட்டவை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் (Criminal Investigation Department ) மேற்கொண்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், இரண்டு வகையான கடவுச்சீட்டுகளிலும் ஒரே மாதிரியான கைரேகைகள் பதிவு செய்யப்பட்டு, குடிவரவுத் திணைக்களத்தின் தரவு அமைப்புக்குள் அனுப்பப்பட்டுள்ளதாக விசேட விசாரணையில் தெரியவந்துள்ளது.

பல அதிகாரிகளின் உதவியுடன் இந்தப் போலி கடவுச்சீட்டுகள் தயாரிக்கப்பட்டதாகவும், இவ்வாறு தயாரிக்கப்பட்ட கடவுச்சீட்டுகளின் எண்ணிக்கை 20 எனவும் அதில் 14 டுபாய் பாதாள உலகக் குழுவினரின் பிடியில் சிக்கியுள்ளதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (Criminal Investigation Department ) தெரிவித்துள்ளது.

இந்த போலி கடவுச்சீட்டிற்காக ஐந்து லட்சம் ரூபா பணம் செலுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை வவுனியா அலுவலகத்தில் அச்சிடப்பட்டவை என விசாரணைகளில் மேலும் தெரியவந்துள்ளது.

இந்த மோசடி நடவடிக்கையில் ஈடுபட்ட குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் பணிபுரியும் நிர்வாக சேவை அதிகாரிகள் இருவரை குற்றப்புலனாய்வு திணைக்களம் அண்மையில் கைது செய்தது.

இந்த மோசடியுடன் தொடர்புடைய வேறு சிலரைக் கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன, ஆனால் இரண்டு அதிகாரிகளையும் கைது செய்யும் போது சில தரப்பினர் பலத்த அழுத்தம் பிரயோகித்து கைது செய்வதைத் தடுக்க முயன்றனர்.

கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள தரவு அமைப்பு இருந்தும், டுபாயில் பாதாள உலகக் குழுவினர் தயாரித்த போலி கடவுச்சீட்டிலும் உண்மையான கடவுச்சீட்டிலும் ஒரே கைரேகையை ஊழல் அதிகாரிகள் பதித்துள்ளனர்.

கோடிக்கணக்கான மதிப்புள்ள தரவு அமைப்புகளை வாங்குவதில் எந்தப் பயனும் இல்லை எனவும் அவர்கள் பணத்திற்காக தரவு அமைப்புகளையும் மாற்றுவதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Murder Recovered Recovered Recovered 19
இலங்கைசெய்திகள்

கஹவத்தையில் கடும் பதற்றம்! பொதுமக்கள் மீது கண்ணீர் புகைத் தாக்குதல் நடத்தும் பொலிஸார்

கஹவத்தையில் பொலிஸார் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் ஏற்பட்ட குழப்பநிலை காரணமாக அங்கு கடும் பதற்றமான சூழல்...

Murder Recovered Recovered Recovered 17
இலங்கைசெய்திகள்

எமக்கு தொடர்பில்லை! செம்மணி அவலத்தில் இருந்து பொறுப்பு துறக்கும் அமைச்சர்

செம்மணி புதைகுழி சம்பவங்களுக்கும் தனது கட்சிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...