Connect with us

இலங்கை

கொழும்பில் இருந்து சென்ற பேருந்தை பயணிகளுடன் கடத்திய நபரால் பரபரப்பு

Published

on

24 6657e88d3be9b

கொழும்பில் இருந்து சென்ற பேருந்தை பயணிகளுடன் கடத்திய நபரால் பரபரப்பு

கலேவெல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிற்கு அருகில் நிறுத்தப்பட்ட தனியார் பயணிகள் பேருந்து ஒன்று கடத்தப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பேருந்தானது நிறுத்தப்பட்டு சாரதி, நடத்துனர் உள்ளிட்ட பயணிகள் உணவருந்தச் சென்ற போது, ​​குடிபோதையில் நபர் ஒருவர் பேருந்தை இயக்கி இப்பன்கட்டுவ மயானத்திற்கு அருகில் விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தம்புள்ளை தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெளிநபர் ஒருவர் பேருந்தில் ஏறி, அதை இயக்கி ஓட்ட ஆரம்பித்ததாகவும், மற்ற பயணிகள் பயந்து அலறியதாகவும் கூறப்படுகிறது.

கொழும்பு மற்றும் திருகோணமலை மூதூருக்கு இடையில் இயங்கும் இந்த தனியார் பயணிகள் பேருந்து மூதூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது, ​​நேற்று இரவு 12:00 மணியளவில் பலால வெவ ஹோட்டலுக்கு அருகில் உணவுக்காக நிறுத்தப்பட்டுள்ளது.

பேருந்தில் இருந்த ஓட்டுநர், நடத்துனர் உட்பட சிலர் தேநீர் அருந்துவதற்காக ஹோட்டலுக்குச் சென்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அப்போது, ​​இப்பன்கட்டுவா பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் ஹோட்டல் அருகே சாரதி மற்றும் நடத்துனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

குடிபோதையில் இருந்ததாகக் கூறப்படும் அவர், ஹோட்டலை விட்டு வெளியேறி, பேருந்தில் ஏறி, அங்கிருந்த சாவியுடன் பேருந்தை இயக்கியுள்ளார். அத்துடன், பயணிகள் மற்றும் பேருந்துடன் தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனை கண்ட பேருந்தின் நடத்துனர் மற்றும் சாரதி ஆகியோர் முச்சக்கர வண்டியில் ஏறி பலவந்தமாக எடுத்துச் சென்ற பேருந்தை துரத்திச் சென்றுள்ளனர்.

இந்த நிலையில் குடிபோதையில் இருந்த நபர் இப்பன்கட்டுவ மயானத்திற்கு அருகில் பேருந்தை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அதற்குள் பேருந்து 4 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் சென்றதாகவும் பயணிகள் மரண பீதியில் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

ஜோதிடம்

4 3 4 3
இலங்கை3 மணத்தியாலங்கள் ago

முகத்திற்கு பயன்படுத்தப்படும் கிரீம் விற்று சொகுசு கார் வாங்கிய நடிகை – இலங்கை CID விசாரணை

நடிகை பியுமி ஹன்சமாலி (Piumi Hansamali), சந்தேகத்திற்கிடமான முறையில் சொத்து சேர்த்ததாக கூறப்படும் விசாரணை தொடர்பான வாக்குமூலத்தை பதிவு செய்வதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) சட்டவிரோத...

3 3
இலங்கை5 மணத்தியாலங்கள் ago

அரசியல் கட்சிக்கான இலவச விமான பயணச்சீட்டு : ரணிலின் அறிவிப்பு

சர்வதேச நாணய நிதியத்திடம் மாற்று யோசனை முன்வைக்கும் அரசியல் கட்சிக்கு இலவச விமான பயணச்சீட்டு வழங்கத் தயார் என அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasinghe) அறிவித்துள்ளார்....

2 1 2 2 1 2
செய்திகள்5 மணத்தியாலங்கள் ago

2024 இற்கான பிரபலமான விளையாட்டு நட்சத்திரம் : இலங்கை வீரருக்கு கிடைத்த விருது

இலங்கை (Sri Lanka) கிரிக்கட் வீரர் மதீஷ பத்திரணவிற்கு (Matheesha Pathirana) இந்தியாவில் (India) பிஹைன்ட்வுட்ஸ் கோல்டன் ஐகொன் விருது வழங்கும் நிகழ்வில் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்திய...

tamilni 1 tamilni 1
இலங்கை5 மணத்தியாலங்கள் ago

ஹிருணிகா பிரேமச்சந்திர சார்பில் பிணை மனு தாக்கல்! நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

கொழும்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவின் விசாரணை ஜூலை 4 ஆம் திகதிக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால்...

Rasi Palan new cmp 25 Rasi Palan new cmp 25
செய்திகள்8 மணத்தியாலங்கள் ago

இன்றைய ராசி பலன் 02 ஜூலை 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலனை (ஜூலை 2, 2024 செவ்வாய்க் கிழமை) இன்று சந்திரன் பகவான் மேஷ ராசியில் பரணி, கிருத்திகை நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று சித்த...

Rasi Palan new cmp 10 Rasi Palan new cmp 10
ஜோதிடம்2 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 30.06.2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலனை (ஜூன் 30, 2024 ஞாயிற்று கிழமை) இன்று சந்திரன் பகவான் மீனம், மேஷ ராசியில் ரேவதி, அஸ்வினி நட்சத்திரத்தில் பயணிக்க உள்ளார். இன்று...

tamilnaadi 4 tamilnaadi 4
செய்திகள்3 நாட்கள் ago

இன்றைய ராசி பலன் 29 ஜூன் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan

இன்றைய ராசி பலன் 29 ஜூன் 2024 – 12 ராசிக்கு எப்படி இருக்கும்? Today Rasi Palan இன்றைய ராசிபலன் ஜூன் 29, 2024, குரோதி...