உலகம்
ஜனாதிபதியின் மரணம் சதி என அறிந்தால்… உலகப் போர் உறுதி
ஜனாதிபதியின் மரணம் சதி என அறிந்தால்… உலகப் போர் உறுதி
ஈரானிய ஜனாதிபதியின் மரணத்திற்கு பின்னால் எதிரியின் கை இருப்பதாக தெரிய வந்தால், உலகப் போர் உறுதி என்றே நிபுணர் ஒருவர் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட Bell 212 ஹெலிகொப்டரின் சிதைந்த பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, மிக மோசமான வானிலை காரணமாகவே விபத்து நேர்ந்திருக்கலாம் என ஈரான் தரப்பு நம்புகிறது.
இந்த நிலையில் மக்களுக்கான பணியில் ஈடுபட்டிருக்கும் போது ஜனாதிபதி ரைசி வீர மரணமடைந்துள்ளதாக உள்ளூர் செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. இதனிடையே, அவசர அமைச்சரவை கூட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட, அதில் ஜனாதிபதியின் ஆசனம் காலியாக இருந்தது என்றே தகவல் வெளியானது.
இதனிடையே, ஈரானிய ஊடகவியலாளர் ஒருவர் தெரிவிக்கையில், இந்த விபத்தின் பின்னணி தொடர்பில் உலக நாடுகளைவிட ஈரான் தனிக்கவனமெடுத்து விசாரிக்கும் என்றார்.
இந்த பேரிழப்பின் பின்னணியில் இன்னொரு நாடு இருப்பதாக உறுதியானால், அல்லது எதிரி நாட்டுடன் இன்னொருவர் இணைந்து செயல்பட்டார் என்றால், ஈரானிடம் இருந்து கடுமையான எதிர்வினையை எதிர்கொள்ள நேரிடும் என்றார்.
ஜனாதிபதி ரைசியின் இறப்புக்கு பின்னார் தீவிரவாத தொடர்பு உறுதியானால், உலகப் போர் உறுதி என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது ஒரு சாதாரண விபத்து என்று நம்ப ஈரானிய மக்கள் தயாராக இல்லை என்றும்,
உயர் மட்டத்தால் அந்த ஹெலிகொப்டர் பராமரிக்கப்பட்டு வந்துள்ளது என்றும், அதிகாரிகள் தரப்பில், இது வெறும் விபத்து என நம்ப மறுப்பதாகவும் அந்த ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார்.
மேற்கத்திய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா அல்லது இஸ்ரேல் நாடுகளின் கை இருக்கலாம் என்றும் சந்தேகிக்கின்றனர். ஆனால் ஈரான் தரப்பில் அல்லது அந்த நாடுகள் தரப்பில் இன்னும் இதை உறுதி செய்யவில்லை.
இப்ராஹிம் ரைசியின் இறப்பை அடுத்து நாடு முழுவதும் 5 நாட்கள் துக்கமனுசரிக்கப்படுகிறது. மேலும், உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிடபப்ட்டுள்ளது.