சினிமாசெய்திகள்

என் திருமணம் அந்த இடத்தில் தான்.. தமிழ் பெண் என நிரூபிக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

Share

என் திருமணம் அந்த இடத்தில் தான்.. தமிழ் பெண் என நிரூபிக்கும் ஸ்ரீதேவி மகள் ஜான்வி

நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி தற்போது ஹிந்தி சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கிறார். அவர் வெளியிடும் கவர்ச்சி போட்டோக்களுக்கே பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது.

ஜான்வி கபூர் தற்போது தெலுங்கிலும் அறிமுகம் ஆகி இரண்டு படங்களில் நடித்து வருகிறார். அடுத்து அவர் தமிழுக்கு எப்போது வருகிறார் என்று தான் ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால் அவர் தற்போதைக்கு நேரடி தமிழ் படம் எதுவும் ஒப்புக்கொள்ளவில்லை.

ஜான்வியின் அம்மா ஸ்ரீதேவி தமிழ்நாட்டில் பிறந்து லேடி சூப்பர்ஸ்டாராக இந்திய சினிமாவில் வலம்வந்தவர். அவர் இடத்தை ஜான்வி பிடிக்க முடியுமா என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

ஜான்வி கபூர் ஆன்மீகத்தில் அதிகம் ஈடுபாடு கொண்டவர். அவர் பிறந்தநாள் அன்று வருடம்தோறும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

தனக்கு திருமணம் திருப்பதியில் தான் நடைபெறும் என்றும் அவர் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். மேலும் காஞ்சிபுரம் தங்க ஜரி பட்டுப்புடவை அணிந்து கொண்டு தான் திருமணம் செய்வேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

பாலிவுட் நடிகைகள் பலரும் தங்கள் திருமணத்தை பல கோடி செலவு செய்து பிரம்மாண்டமாக நடத்தும் சூழலில், ஜான்வி கபூர் ஆன்மீக தலத்தில் திருமணம் நடத்த முடிவெடுத்து இருப்பதற்கு பாராட்டு குவிந்து வருகிறது.

Share
தொடர்புடையது
17 10
சினிமா

23 ஆண்டுகள்.. நடிகர் தனுஷின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தனுஷ். கோலிவுட் சினிமாவில் துவங்கிய இவருடைய பயணம் தற்போது...

18 10
சினிமா

மீண்டும் கெனிஷாவுடன் ஜோடியாக வந்த நடிகர் ரவி மோகன்

நடிகர் ரவி மோகன் – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது. தனக்கு விவாகரத்து வேண்டும்...

20 11
சினிமா

பூஜா ஹெக்டேவை கலாய்த்தாரா நடிகை பிரியா ஆனந்த்

சினிமாவில் பொதுவாக ஹீரோயின்கள் என்றாலே வெள்ளையாக தான் இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி ஆகிவிட்டது....

19 10
சினிமா

விஜய்யை தொடர்ந்து ரஜினியுடன் இணையும் ஹெச். வினோத்

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி அடையாளத்தை உருவாக்காகியுள்ள இயக்குநர்களில் ஒருவர் ஹெச். வினோத். இவர் இயக்கத்தில்...