உலகம்
இண்டீட் நிறுவனத்தின் சுமார் 1000 ஊழியர்கள் பணி நீக்கம்
இண்டீட் நிறுவனத்தின் சுமார் 1000 ஊழியர்கள் பணி நீக்கம்
உலகின் முன்னணி வேலை வாய்ப்பு இணைய தளமான இண்டீட் (Indeed)நிறுவனம் சுமார் 1000 ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த 2 ஆண்டுகளில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருவதால் தங்கள் நிறுவனத்தின் 8% ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக இண்டீட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கிறிஸ் ஹைம்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
அத்துடன் செலவை கட்டுப்படுத்தும் நோக்கத்தையும் கருத்தில் கொண்டு ஊழியர்களின் எண்ணிக்கையை குறைக்கும் கடினமான முடிவை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், கடந்த ஆண்டு 2,200 ஊழியர்களை இந்நிறுவனம் பணிநீக்கம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.