24 6642d8c7a6a84
சினிமாசெய்திகள்

குத்து பாடலுக்கு விஜய் டிவி பிரபலத்துடன் நடனமாடிய ஸ்ரீதேவி விஜயகுமார்.. வைரலாகும் வீடியோ

Share

குத்து பாடலுக்கு விஜய் டிவி பிரபலத்துடன் நடனமாடிய ஸ்ரீதேவி விஜயகுமார்.. வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் பிரபல மூத்த நடிகர் விஜயகுமாரின் மகள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

காதல் வைரஸ் படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக என்ட்ரி கொடுத்தார். ஆனால், இதற்கு முன்பே தெலுங்கில் பிரபாஸ் நடிப்பில் வெளிவந்த ஈஸ்வர் எனும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். தனுஷுடன் தேவதையை கண்டேன், ஜீவாவுடன் தித்திக்குதே ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

2009ஆம் ஆண்டு ராகுல் என்பவருடன் 2009ஆம் ஆண்டு நடிகை ஸ்ரீதேவி விஜயகுமாருக்கு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். திருமணத்திற்கு பின் படங்களில் பெரிதும் நடிக்கவில்லை.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார். இந்த நிகழ்ச்சியில் ரியோ மற்றும் ஸ்ரீதேவி இடையே நடக்கும் நகைச்சுவையான விஷயங்கள் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானது.

இந்த நிலையில், தளபதி விஜய்யின் கில்லி படத்தில் இடம்பெறும் அப்படி போடு பாடலுக்கு விஜய் டிவி பிரபலம் தொகுப்பாளரும் நடிகருமான ரியோவுடன் இணைந்து ஸ்ரீதேவி விஜயகுமார் நடனமாடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

Share
தொடர்புடையது
Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...

Untitled 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் அதிகரித்து வரும் வீதி விபத்துக்கள்: பாதசாரிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை!

இலங்கையில் இந்த ஆண்டின் கடந்த சில மாதங்களில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகக் காவல்துறை...