இலங்கை
மூடப்பட்ட அரச பாடசாலைகள்: பகிரங்கப்படுத்திய அமைச்சர்
மூடப்பட்ட அரச பாடசாலைகள்: பகிரங்கப்படுத்திய அமைச்சர்
2019ஆம் ஆண்டு முதல் 2023ஆம் ஆண்டு வரை 81 அரச பாடசாலைகளை மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்தோடு, அந்த பாடசாலைகள் அனைத்தும் மாகாண சபைக்கு சொந்தமானவை எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும், குறித்த பாடசாலைகளின் கட்டிட காணியை ஏனைய உற்பத்தி நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, சில பாடசாலைகள் கட்டப்பட்டு அந்த காணி வேறு கல்வித் தேவைகளுக்குப் பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டுள்ளார்.