24 6639c73b09070
இலங்கைசெய்திகள்

தென்னிலங்கையில் படுகொலை செய்யப்பட்ட பெண்

Share

தென்னிலங்கையில் படுகொலை செய்யப்பட்ட பெண்

தென்னிலங்கையில் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட , ராஜகல பிரதேசத்தை சேர்ந்த 78 வயதான பெண்னே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு வீட்டுக்குள் புகுந்த நபர்கள், பெண்ணை கொலை செய்ததுடன், பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

குறித்த பெண்ணின் கைகால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த பெண் தனது சகோதரி மற்றும் அவரது கணவருடன் வசித்து வந்துள்ளார்.

குறித்த இருவரும் இரவில் சிகிச்சைக்காக வெலிகம நகருக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...