24 6634cbd56ff18
சினிமாபொழுதுபோக்கு

பல கோடி சம்பளம் உயர்த்தினேனா?- சம்பளம் குறித்த செய்திக்கு கவின் பதில்

Share

பல கோடி சம்பளம் உயர்த்தினேனா?- சம்பளம் குறித்த செய்திக்கு கவின் பதில்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் ஒருவர் தான் கவின். சின்னத்திரையில் படிப்படியான முன்னேறி நாயகனாக நடிக்க தொடங்கி அப்படியே வெள்ளித்திரை பக்கம் வந்தவர்.

இப்போது இளம் கதாநாயகனாக கொண்டாடப்படும் இவர் மிக எளிதில் இந்த வெற்றியை காணவில்லை, அவருக்கு பின்னாலும் நிறைய தோல்வி, வெற்றி என நிறைய உள்ளது.

கவினின் சினிமா பயணத்தில் அவரது பெயர் சொல்லும் படமாக அமைந்தது டாடா, இதில் அவரின் நடிப்புக்கு பெரிய பாராட்டுக்கள் கிடைத்தது. இப்போது இந்த படத்தை தொடர்ந்து கவின், இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் நடித்துள்ளார்.

டாடா படத்தின் மூலம் பெரிய வெற்றியை கண்டுள்ள கவின் சம்பளத்தை கிடுகிடுவென கோடியில் உயர்த்திவிட்டதாக ஒரு செய்தி வைரலாக பரவியது. இதுகுறித்து அண்மையில் நடந்த ஸ்டார் பட பத்திரிக்கையாளர் சந்திப்பில் கவினிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், நம்ம கேட்கிறோம் என்று யாரும் சம்பளத்தை கொடுக்க மாட்டார்கள்.

இப்போது நீங்கள் ஒரு ஆபிஸில் இருந்து அடுத்த ஆபிஸுக்கு செல்கிறீர்கள் என்றால் சம்பளம் அதிகமாக இருந்தால் தான் போவீர்கள், உங்களது முந்தைய சம்பளத்தை பொறுத்து அதிகமாகும்.

மார்க்கெட் தான் சம்பளத்தை தீர்மானிக்கிறது, இந்தப் படம் எனக்கு 4வது படம். இந்த படத்தை முடிக்கவே எனக்கு 1 வருடம் ஆனது, மற்றபடி வந்த தகவல்கள் எதுவும் உண்மையில்லை என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...