24 662f3e5f31962
இலங்கைசினிமா

விஜய்யின் மகனுடன் மீட்டிங் நடந்தது உண்மைதான், அவர் எப்படிபட்டவர்- ஆனால் கவின் ஓபன் டாக்

Share

விஜய்யின் மகனுடன் மீட்டிங் நடந்தது உண்மைதான், அவர் எப்படிபட்டவர்- ஆனால் கவின் ஓபன் டாக்

தமிழ் சினிமாவில் மிகவும் பிஸியான நாயகனாக நடிகர் கவின் வலம் வருகிறார்.

டாடா என்ற படம் அவருக்கு சிறந்த நடிகர் என்ற பெயரை வாங்கி கொடுத்துள்ளது. அப்படம் கொடுத்த வெற்றி அடுத்தடுத்து நிறைய படங்கள் கமிட்டாகி இருக்கிறார்.

இப்போது பியார் பிரேமா காதல் பட புகழ் இளன் இயக்கத்தில் ஸ்டார் என்ற படத்தில் கவின் நடித்துள்ளார்.

லைகா நிறுவனம் தயாரிக்க விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் ஒரு படம் இயக்க இருப்பது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

இந்த படத்தில் கவின் நடிக்க பேச்சு வார்த்தை நடப்பதாக கூறப்பட்ட நிலையில் இதுகுறித்து கவின் ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.

அதில் அவர், இந்த புதிய படத்திற்காக மீட்டிங் நடந்தது உண்மைதான், எனது கமிட்மெண்ட் எல்லாம் சொல்லியிருக்கிறேன். சில மாற்றங்கள் செய்துவிட்டு மீண்டும் சந்திக்கலாம் என்று கூறினார்கள், அதன்பிறகு எந்த அழைப்பும் வரவில்லை என்றார்.

ஜேசன் சஞ்சய் பற்றி கூறியதாவது, விஜய் அவர்களை நாம் பெரிய அளவில் கொண்டாடி பேசுவோம், ஆனால் அவர் எதுவுமே இல்லாமல் எப்போதும் சாதாரணமாக இருப்பார்.

அப்படி தான் ஜேசன் சஞ்சய்யும், அவரிடமும் பிரபலத்தின் மகன் என்று எந்த எண்ணமும் இல்லை. மிகவும் அமைதியான எல்லோரையும் மதிக்க கூடிய ஒருவர் என தெரிவித்திருக்கிறார் கவின்.

Share

Recent Posts

தொடர்புடையது
121664732
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை மாணவி 3 மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை முயற்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வைத்தியசாலையில் அனுமதி!

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஒருவர் இன்று...

images 2 3
செய்திகள்இலங்கை

நினைவேந்தல் காணி விவகாரம்: இரு தரப்பினரும் ஒற்றுமையாக வாருங்கள்; இல்லையேல் நல்லூர் நிலம் வழங்கப்படாது – முதல்வர் மதிவதனி அதிரடி அறிவிப்பு!

நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வைக் கொண்டாடுவது தொடர்பாகக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இன்மையால், இரு தரப்பினருக்கும்...

image 2a5deff3ae
செய்திகள்இலங்கை

பாடசாலை உணவகங்களில் ஆரோக்கியமற்ற உணவுகள் அதிகம்: 91% நிர்வாகிகளுக்கு வழிகாட்டுதல்கள் தெரிந்தும் 34% பாடசாலைகளே பின்பற்றுவதாக யுனிசெஃப் அறிக்கை!

நாட்டிலுள்ள பாடசாலைகளின் உணவகங்களில் (Canteens) ஆரோக்கியத்துக்குக் கேடு விளைவிக்கும் உணவுப் பொருட்கள் எளிதில் கிடைப்பதாக ஐக்கிய...

MediaFile 1 4
செய்திகள்இலங்கை

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மீதான ஊழல் வழக்கு: கையடக்கத் தொலைபேசி கட்டணம் மோசடி – சாட்சிப் பதிவு நிறைவு, மேலதிக விசாரணை டிசம்பர் 9க்கு ஒத்திவைப்பு!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் முன்னாள் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட இரு பிரதிவாதிகளுக்கு...