24 662f085d1765a
சினிமாபொழுதுபோக்கு

விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய முன்னணி பிரபலங்கள்.. அப்படி என்ன பிரச்சனை

Share

விஜய் டிவியில் இருந்து சன் டிவிக்கு தாவிய முன்னணி பிரபலங்கள்.. அப்படி என்ன பிரச்சனை

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் 5வது சீசன் கடந்த வாரம் துவங்கியது. ஆனால், இந்த வருடம் சற்று தாமதமாக தான் இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்தனர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த நான்கு சீசன்களாக நடுவராக பணியாற்றி வந்தவர் செஃப் வெங்கடேஷ் பட். இவர் தற்போது குக் வித் கோமாளியில் இருந்து விலகி விட்டார். அதே போல் அந்த நிகழ்ச்சியை நடத்தி வந்த மீடியா மேசன்ஸ் எனும் நிறுவனமும் வெளியேறிவிட்டது.

இவர்கள் திடீரென இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற அப்படி என்ன காரணம் என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. விஜய் டிவிக்கும், இவர்களுக்கும் இடையே ஏதாவது பிரச்சனையா என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

இந்த நிலையில், விஜய் டிவியில் இருந்து வெளியேறிய வெங்கடேஷ் பட் மற்றும் மீடியா மேசன்ஸ் டீம் இணைந்து சன் தொலைக்காட்சியில் புதிதாக குக்கிங் நிகழ்ச்சி ஒன்றை துவங்கியுள்ளனர். நேற்று மாலை சன் டிவியில் இருந்து இந்த புதிய நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளிவந்தது.

டாப் குக்கு டூப் குக்கு என இந்த நிகழ்ச்சிக்கு தலைப்பு வைத்துள்ளனர். மேலும் விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பணியாற்றி வந்த ஜி.பி. முத்து, மோனிஷா, தீபா, பரத் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியின் மூலம் சன் டிவிக்கு வந்துள்ளனர்.

மேலும் விஜய் தொலைக்காட்சியின் மூலம் வெள்ளித்திரை வரை பிரபலமான KPY தீனாவும், இந்த புதிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கிறார் என இந்த ப்ரோமோ மூலம் தெரியவந்துள்ளது.

Share
தொடர்புடையது
BeFunky 40 scaled 1
பொழுதுபோக்குசினிமா

அதிர்ச்சியில் சின்னத்திரை: கௌரி சீரியல் நடிகை நந்தினி தற்கொலை!

கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் புகழ்பெற்ற ‘கௌரி’ சீரியலில் நடித்து வந்த இளம் நடிகை நந்தினி,...

25 6952424d7d3f6
பொழுதுபோக்குசினிமா

உலகளவில் 6,000 கோடியைக் கடந்த அவதார் 3: 10 நாட்களில் பிரம்மாண்ட வசூல் சாதனை!

ஜேம்ஸ் கேமரூனின் இயக்கத்தில் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த ‘அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்’ (Avatar 3)...

allu arjun 25838
பொழுதுபோக்குசினிமா

புஷ்பா-2 விபத்து வழக்கு: அல்லு அர்ஜுன் 11-வது குற்றவாளியாகச் சேர்ப்பு! காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்.

கடந்த 2024 ஆம் ஆண்டு ‘புஷ்பா-2’ திரைப்பட விளம்பர நிகழ்வின் போது நிகழ்ந்த நெரிசலில் பெண்...

images 27
சினிமாபொழுதுபோக்கு

ஒரு படத்திற்கு 10 கோடி ரூபாய்! சம்பளத்தை கிடுகிடுவென உயர்த்திய நடிகை ராஷ்மிகா.

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி எனப் பல மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வரும் ராஷ்மிகா...