இலங்கை
இலங்கையில் நிறுத்தப்பட்ட பாரிய திட்டங்கள்
இலங்கையில் நிறுத்தப்பட்ட பாரிய திட்டங்கள்
பொருளாதார சீர்கேட்டால், 35 பாரிய அபிவிருத்தி திட்டங்களுடன் தொடர்புடைய 300க்கும் மேற்பட்ட உடன்படிக்கைள், கடந்த ஆண்டு நிறுத்தி வைக்கப்பட்டதாக நிதி அமைச்சக வட்டாரங்களில்(Ministry of Finance) தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றில், ஒன்பது திட்டங்களுக்கு தற்போது 2.3 பில்லியன் ரூபாய் இழப்பீடு ஒப்பந்ததாரர்களால் கோரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
நிதி அமைச்சகத்தின் திட்ட மேலாண்மை மற்றும் கண்காணிப்புத் துறை (PMDD)இதனை தெரிவித்துள்ளது.
எனினும் மேலும் 22 திட்டங்களுக்கான இழப்பீட்டுக்கோரல்களை ஒப்பந்தக்காரர்கள் சமர்ப்பிப்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக கண்காணிப்புத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2023 ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் மொத்தம் 37 திட்டங்கள் எந்தவிதமான உடல் முன்னேற்றத்தையும் அடையவில்லை.
அவற்றில் 33 திட்டங்களில் 17 திட்டங்களுக்கு வெளிநாட்டு கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், ஒப்பந்ததாரர்களின் மோசமான செயல்பாடு காரணமாக 41 திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்றும் நிதி அமைச்சகத்தின் திட்ட மேலாண்மை மற்றும் கண்காணிப்புத் துறை தெரிவித்துள்ளது.